Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தவெக தலைவர் விஜய் வெளியிட்ட தேர்தல் அறிக்கை..எடப்பாடி பழனிச்சாமி கருத்து

தவெக தலைவர் விஜய் வெளியிட்ட தேர்தல் அறிக்கை..எடப்பாடி பழனிச்சாமி கருத்து

Samayam Tamil 2 months ago

மிழக வெற்றிக்கழகம் கட்சியின் சார்பாக நேற்று மகளிர் தின கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. மகளிர் தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் விழாக்களை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் விஜய் துவங்கியிருக்கும் தமிழக வெற்றிக்கழகம் கட்சி சார்பாக நேற்று மாமல்லபுரத்தில் ஒரு அரங்கத்தில் மகளிர் தின கொண்டாட்டம் நடைபெற்றது. அந்த விழாவில் விஜய் தன் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை கூறினார்.

அதில் அறுபது வயது வரை இருக்கும் பெண்களுக்கு மாதந்தோறும் 2500 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும். அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் குடும்பங்களுக்கு ஆறு சிலிண்டர்கள் கட்டணமின்றி வழங்குவோம். தமிழ்நாட்டில் ஒரு குழு அமைக்கப்பட்டு பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வோம் என்பது போன்ற பல வாக்குறுதிகளை குறிப்பாக பெண்களுக்கான வாக்குறுதிகளை மகளிர் தினத்தில் வெளியிட்டார் தவெக தலைவர் விஜய்.

இவரின் தேர்தல் வாக்குறுதிகள் சிலரால் வரவேற்கப்பட்டாலும் ஒரு சிலரால் வழக்கம் போல விமர்சிக்கப்பட்டு வருகின்றது. திமுக மற்றும் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை போலவே விஜய்யின் தேர்தல் அறிக்கை உள்ளது. காப்பி பேஸ்ட் தேர்தல் அறிக்கையாக இருக்கின்றது என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விஜய்யின் தேர்தல் அறிக்கை குறித்து தன் கருத்தினை முன் வைத்திருக்கின்றார். விஜய்யின் தேர்தல் அறிக்கை குறித்து உங்களின் கருத்து என்ன என எடப்பாடி பழனிசாமியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ஒவ்வொரு கட்சியினரும் தேர்தலை முன்னிட்டு வாக்குறுதிகளை வழங்கி வருகின்றனர். அதுபோல தான் விஜய்யின் தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார் என்றார்.

ஒவ்வொரு கட்சியும் அவர்களின் நிலைப்பாட்டை வைத்து தேர்தல் அறிக்கையை வெளியிடுகின்றனர். எனவே அவர்களின் தேர்தல் அறிக்கை குறித்தான விமர்சனங்களையும் கேள்விகளையும் அவர்களிடம் தான் கேட்க வேண்டும். இதில் நான் கருத்து சொல்ல ஒன்றுமில்லை. ஒவ்வொரு கட்சி தலைவர்களும் அவரவருக்கு விருப்பமான முறையில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

எனவே அதில் கேள்விகள் இருந்தால் அவர்களை கேளுங்கள் என்றார் எடப்பாடி பழனிச்சாமி. மேலும் மகளிர் தினத்தை முன்னிட்டு ஏதேனும் அறிவிப்பு அல்லது சிறப்பு திட்டங்கள் இல்லையா ? என எடப்பாடி பழனிசாமியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் ,நெறைய அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றோமே ? புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் காலத்திலும் அறிவிப்புகளை கொடுத்தோம், புரட்சி தலைவி அம்மா ஜெயலலிதா அவர்களின் ஆட்சியிலும் கொடுத்தோம். தற்போதும் பல அறிவிப்புகளை கொடுத்திருக்கின்றோம்.

இதனைத்தொடர்ந்து அதிமுக கண்டிப்பாக ஆட்சிக்கு வரும். ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் மாதந்தோறும் 2000 ருபாய் வழங்கப்படும் என்றார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. இந்நிலையில் விஜய்யின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து பலத்தப்பட்ட கருத்துக்கள் உலா வருகின்றன.



அதாவது அவரின் வாக்குறுதிகள் மற்ற கட்சிகளின் வாக்குறுதிகளை போலவே இருப்பதாக சிலர் விமர்சிக்கின்றனர். அதைப்போல இலவசம் வேண்டாம் என வலியுறுத்தி வந்த விஜய்யின் திட்டங்களிலேயே பல இலவசங்கள் இருப்பதாக தெரிவதாகவும் விமர்சனம் எழுகின்றன. இப்படி விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் வாக்குறுதிகள் கலவையான கருத்துக்களை பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil