Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தவெகவின் அடுத்த மாநாடு எங்கே ? எப்போ ?விஜய் எடுத்த முடிவு ?

தவெகவின் அடுத்த மாநாடு எங்கே ? எப்போ ?விஜய் எடுத்த முடிவு ?

Samayam Tamil 2 months ago

மிழக வெற்றிக்கழகம் கட்சி தனது முதல் தேர்தலை சந்திக்க இருக்கின்றனர். வருகின்ற சட்டமன்ற தேர்தல் தான் அவர்கள் போட்டியிடும் முதல் தேர்தலாகும்.

விஜய் துவங்கியிருக்கும் இக்கட்சி தனது முதல் சட்டமன்ற தேர்தலிலேயே மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கும் என தெரிகின்றது. கண்டிப்பாக தாக்கத்தை தவெக உண்டாக்கும் என்பதே பலரது கணிப்பாகவும் இருக்கின்றது. அதே சமயம் தவெக கட்சி தேர்தலில் தாக்கத்தை உண்டாக்காது என்பதும் சிலரது கருத்தாக இருந்து வருகின்றது.

தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் விஜய் மீது சர்ச்சைகள் எழுந்துகொண்டே வருகின்றன. இதனால் கடும் விமர்சனங்களை அவர் சந்தித்து வருகின்றார். ஆனாலும் தொடர்ந்து தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றார் தளபதி விஜய். இந்நிலையில் நேற்று தான் தஞ்சாவூரில் விஜய் தனது சந்திப்பு கூட்டத்தை நடத்தினார். நிர்வாகிகள் சந்திப்பு கூட்டமும் தேர்தல் பரப்புரையையும் விஜய் நேற்று தஞ்சாவூரில் நடத்தினார்.

அவரை காண ஏராளமான மக்கள் குறிப்பாக இளைஞர்கள் திரண்டார்கள். அப்போது விஜய்யை காண அவரது வாகனத்தை பின்தொடர்ந்த இளைஞர்கள் சிலர் விபத்தில் சிக்கினார்கள். அதில் ஒரு இளைஞர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இவ்வாறு விஜய்யின் ஒவ்வொரு சந்திப்பு கூட்டத்திலும் விபத்து நடந்து வருகின்றது.

இந்நிலையில் விஜய் தவெகவின் அடுத்த மாநாட்டிற்கான திட்டத்தை வகுத்து வருகிறாராம். அதன்படி விஜய் தனது கட்சியின் அடுத்த மாநாட்டை திருச்சியில் நடத்த திட்டமிட்டு வருகிறாராம். திருச்சியில் மார்ச் இறுதியில் தனது கட்சியின் மாநாட்டை நடத்த விஜய் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன. விக்கிரவாண்டி மற்றும் மதுரையை தொடர்ந்து தனது கட்சியின் மூன்றாவது மாநில மாநாட்டை திருச்சியில் நடத்தவும் அதற்கான இடத்தை தேர்வு செய்து இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை. விரைவில் இதுகுறித்து தவெகநிர்வாகிகள் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தற்சமயம் தவெகவினர் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தெரிகின்றது.

தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்பட்டது. அப்படி தவெக -காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் தவெகவிற்கு பலமாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டது. ஆனால் வழக்கம் போல திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி தான் இம்முறை இணைந்திருக்கின்றனர்.

அப்படியென்றால் தவெகவுடன் கூட்டணி அமைக்கப்போவது யார் ? என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. மறுபக்கம் ராமதாஸ் தரப்பு தவெகவுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூட செய்திகள் வருகின்றன. இதுகுறித்து தவெகவினரிடம் கேட்டால், கூட்டணி குறித்தான பேச்சுவார்த்தைகள் போய்க்கொண்டு இருக்கின்றது.

இறுதி முடிவை தலைவர் விஜய்அறிவிப்பார் என்கின்றனர். மேலும் தவெகவில் யார் கூட்டணி வைத்தாலும் அது அக்கட்சியின் தலைவர் விஜய்யின் தலைமையில் தான் இருக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு அக்கட்சியினர் இருக்கிறார்களாம். ஆனாலும் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்ற திட்டத்திலும் தவெக இருப்பதாக சொல்லப்படுகின்றது. இப்படியான நிலையில் தவெகவுடன் கூட்டணி அமைக்கப்போவது யார் ? என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்து இருக்கின்றது.



இதற்கிடையில் விஜய் தனது மூன்றாவது மாநில மாநாட்டை திருச்சியில் நடத்த திட்டமிட்டு வருகின்றார் எனவும் தகவல் கிடைத்துள்ளது. மேலும் மகளிர் தினத்தில் தவெகவின் வாக்குறுதிகளை வெளியிட விஜய் திட்டமிட்டு வருவதாகவும் செய்திகள் வருவது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil