பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் (75) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். தேவா இசையில் பல பாடல்களைப் பாடியுள்ள இவர், 'பொற்காலம்' படத்தில் 'தஞ்சாவூர் மண்ணு எடுத்து' உள்ளிட்ட பல புகழ்பெற்ற பாடல்களைப் பாடியுள்ளார்.
அவர் பாடிய சில மறக்க முடியாத பாடல்களின் பட்டியல் பின்வருமாறு:
வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா - காதல் கோட்டை (1996)
தஞ்சாவூர் மண்ணு எடுத்து - பொற்காலம் (1997)
கருடா கருடா - நட்புக்காக (1998)
சின்ன காணாங்கருவி - பொற்காலம் (1997)
வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி - காதலே நிம்மதி (1998)
சோக்கு சுந்தரி - மூவேந்தர் (1998)
ஜனவரி நிலவே - என் உயிர் நீதானே (1998)
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா - நினைவிருக்கும் வரை (1999)
காத்தடிக்குது காத்தடிக்குது - நினைவிருக்கும் வரை (1999)
எப்பா எப்பா அய்யப்பா - ஏழையின் சிரிப்பில் (2000)
பஞ்சுமெத்தை கிளியே - இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி (2006)

