Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
டயட் தொடர்பான இதயநோய் மரணங்கள் அதிகரிப்பு;'தி இன்னொவேஷன் நியூட்ரிஷன்' ஷாக்கிங் ரிப்போர்ட்..!

டயட் தொடர்பான இதயநோய் மரணங்கள் அதிகரிப்பு;'தி இன்னொவேஷன் நியூட்ரிஷன்' ஷாக்கிங் ரிப்போர்ட்..!

'தி இன்னொவேஷன் நியூட்ரிஷன்' என்ற ஆய்விதழ் 204 நாடுகளிலிருந்து பெறப்பட்ட ஆய்வுகளில் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு சமீபத்தில் ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த 2023 இல் மட்டும் டயட் தொடர்பான காரணத்தால் இதய நோயால் உலகெங்கும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 லட்சம் என்றும், சீனாவில் 13.6 லட்சம் பேரும் இந்தியாவில் 11 லட்சம் பேரும் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த வகையான மரணங்களுக்கு மூன்று முக்கியக் காரணங்களை இந்த ஆய்வு கண்டறிந்து அதனையும் வெளியிட்டுள்ளது. அதாவது, அதிக அளவு உப்பை உட்கொள்வது, குறைந்த அளவில் பழங்களை உட்கொள்வது, முழுத் தானியங்களைக் குறைவாக உட்கொள்வது போன்ற முக்கிய மூன்று காரணங்கள் என தெரிவித்துள்ளது.

இதய நோய் தொடர்பான மரணங்களைத் தவிர்க்க பழங்கள் அதிகமாக உட்கொள்வது, உப்பைக் குறைவாக எடுத்துக்கொள்வது, விதைகளை அதிக அளவில் உட்கொள்வது, முழுத் தானியங்களை அதிகமாக உட்கொள்வது, பருப்புகளை அதிகமாக உட்கொள்வது, நார்ச்சத்துள்ள உணவை உட்கொள்வது, பதப்படுத்தப்பட்ட இறைச்சியைக் குறைவாக உட்கொள்வது உள்ளிட்ட உணவு முறைகளைப் பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Seithi Punal
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithipunal