Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
இடியுடன் மழை... பலத்த காற்று...! தமிழகத்திற்கு அடுத்தடுத்து வரும் வானிலை எச்சரிக்கை...!

இடியுடன் மழை... பலத்த காற்று...! தமிழகத்திற்கு அடுத்தடுத்து வரும் வானிலை எச்சரிக்கை...!

மிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பம் நீடித்து வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் மழைக்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவி வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.ஆகஸ்டு 29 மற்றும் 30-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். அப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீச வாய்ப்புள்ளது.


ஆகஸ்டு 31-ந்தேதி தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
செப்டம்பர் 1 மற்றும் 2-ந்தேதிகளில் வடகடலோர தமிழகப் பகுதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் பிற பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

செப்டம்பர் 3-ந்தேதி வடகடலோர தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
செப்டம்பர் 4-ந்தேதி தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஆகஸ்டு 29 முதல் செப்டம்பர் 2-ந்தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது. இருப்பினும், சில இடங்களில் வெப்பநிலை சற்று உயரக்கூடும்.
இந்த காலகட்டத்தில் தமிழகத்தின் சில பகுதிகளில் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிக வெப்பநிலை பதிவாகலாம். பிற பகுதிகளில் வெப்பநிலை இயல்பை ஒட்டியே காணப்படும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும்.

ஆகஸ்டு 29 முதல் செப்டம்பர் 2-ந்தேதி வரை தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.
தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் மேற்கண்ட நாட்களில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீச வாய்ப்புள்ளது.

மேலும், அந்தமான் கடல், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் வங்கக்கடலின் சில பகுதிகளிலும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.
மத்தியமேற்கு அரபிக்கடலை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளிலும் ஆகஸ்டு 29 முதல் செப்டம்பர் 2-ந்தேதி வரை மணிக்கு 45

முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது.
இதனால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கடல் பகுதிகளுக்கு மேற்கண்ட நாட்களில் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Seithi Punal
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithipunal