Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கம்யூனிஸ்ட் கட்சிகள் பின்வாங்குகிறதா? அதிமுக எம்எல்ஏக்களை குறிவைக்கும் தவெக?இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்கும் விஜய்!

கம்யூனிஸ்ட் கட்சிகள் பின்வாங்குகிறதா? அதிமுக எம்எல்ஏக்களை குறிவைக்கும் தவெக?இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்கும் விஜய்!

மிழக அரசியலில் ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி கணக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தவெக அரசுக்கு ஆதரவு அளித்து வரும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மாற்று முடிவை நோக்கி நகர்வதாக கூறப்படும் நிலையில், ஆட்சிக்கு தேவையான எண்ணிக்கையை உறுதி செய்ய அதிமுக எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க தவெக தலைமை காய் நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக அரசியலில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்பட்டன. திமுக, அதிமுக என மாறி மாறி ஆட்சி செய்து வந்த நிலையில், விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை கைப்பற்றியது. தனிப்பெரும்பான்மை இல்லாததால் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

இதற்கிடையே அதிமுகவில் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து உட்கட்சி அதிருப்தி அதிகரித்தது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கட்சியின் சில மூத்த நிர்வாகிகள் குரல் எழுப்பி வரும் நிலையில், அதிமுகவைச் சேர்ந்த சில முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே தவெகவில் இணைந்த சில முன்னாள் அதிமுக நிர்வாகிகளுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், அதிமுகவைச் சேர்ந்த பல எம்எல்ஏக்கள் தவெகவுடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர்களில் சிலர் விரைவில் கட்சி மாறக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தவெக மூத்த நிர்வாகி செங்கோட்டையனும், மேலும் பல அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைய வாய்ப்புள்ளதாக ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்த சூழலில், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு தொடர்பாக தெளிவற்ற நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுவதால், சட்டப்பேரவையில் தனது பலத்தை மேலும் அதிகரிக்க தவெக திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனித்தொகுதிகளைச் சேர்ந்த இரண்டு அதிமுக எம்எல்ஏக்களிடம் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் மூன்று எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் கொண்டு வர முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, சட்டப்பேரவை கூட்டத்தொடர் செப்டம்பர் 8ஆம் தேதி நிறைவடைந்த பிறகு அதிமுகவைச் சேர்ந்த 5 எம்எல்ஏக்கள் தவெகவில் இணைய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.

ஆனால், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தால், தங்களுக்கு உரிய அரசியல் முக்கியத்துவம் கிடைக்குமா என்ற கேள்வி அதிமுக எம்எல்ஏக்கள் மத்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டால் தங்களுக்கு தவெக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்பதும் அவர்களின் முக்கிய கவலையாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், அதிமுகவிலிருந்து மேலும் எத்தனை பேர் தவெகவுக்கு செல்கிறார்கள், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு தொடருமா, அல்லது தவெக தனது பெரும்பான்மையை உறுதி செய்ய புதிய கூட்டணி கணக்கை உருவாக்குமா என்பதே தமிழக அரசியலில் அடுத்தடுத்த நாட்களில் கவனம் பெறும் விவகாரமாகியுள்ளது.

அரசியலில் எதுவும் நடக்கலாம் என்ற சூழலில், செப்டம்பர் 8-க்கு பிறகு தமிழக அரசியலில் புதிய பலப்பரீட்சை தொடங்குமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

Seithi Punal
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithipunal