Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி;  ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு..!

கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி; ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு..!

கிரெடிட் கார்டு பயன்பாட்டில் தற்போதுள்ள நடைமுறைப்படி, கடைசி தேதி முடிந்து ஒரு நாள் தாமதமானால் கூட வங்கிகள் அபராதம் விதித்து வருகின்றன.

இதற்க்கு மாற்று நடவடியாக ரிசர்வ் வங்கி புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட தேதி முடிந்து 03 நாட்கள் கடந்த பிறகே ஒரு கணக்கை நிலுவையில் உள்ள கணக்காக வங்கிகள் கருத வேண்டும் எட்ன்றும், இந்த 03 நாட்களுக்குள் தொகையை செலுத்தினால், கூடுதல் அபராத கட்டணங்கள் வசூலிக்கப்படாது என்பதுடன், வாடிக்கையாளரின் கடன் தகுதி பாதிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அபராத கட்டணத்தை கணக்கிடும் முறையில் சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, இதுவரை காலம் மொத்த நிலுவை தொகையின் மீதும் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. ஆனால், இனி கடைசி தேதிக்கு முன்னதாக வாடிக்கையாளர் ஒரு பகுதியை செலுத்தியிருந்தால், மீதமுள்ள நிலுவை தொகைக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், இந்த 03 நாள் அவகாசம் என்பது அபராதம் மற்றும் கடன் தகுதி பாதிப்பில் இருந்து மட்டுமே வாடிக்கையாளர்களை காக்கும். கடைசி தேதிக்கு அடுத்த நாள் முதல் நிலுவை தொகைக்கான வழக்கமான வட்டி கணக்கிடப்படும் என்பதால், வாடிக்கையாளர்கள் நிதி ஒழுக்கத்தை பேணுவது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Seithi Punal
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithipunal