ஒலிம்பிக் கிரிக்கெட் தகுதிச் சுற்றுப் போட்டிகள் வரும் 2028 ஆம் ஆண்டு தொடக்கத்தில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ளன.
1904-க்குப் பிறகு சுமார் 100 ஆண்டுகளுக்குப் பின்னர் வருகிற 2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் நடைபெறவுள்ளது.
இந்தத் தொடருக்கான ஆண்கள், பெண்கள் இருவருக்குமான தகுதிச்சுற்றுப் போட்டிகளுக்கான கால அட்டவணை இந்த மாதம் துபாயில் நடந்த ஐசிசி உறுப்பு நாடுகளுடான கூட்டத்தில் வெளியிடப்பட்டது.
2029 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் ஜூன் 08 முதல் 12 வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக, 2027 மற்றும் 2031-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகளுக்காக, ஆண்கள் பிரிவில் 12 அணிகளும், பெண்கள் பிரிவில் 07 அணிகள், 19 வயதுக்குள்பட்டோருக்கான போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஒவ்வொரு கண்டத்திலிருந்தும் சிறப்பாக செயல்பட்ட டி20 அணிகளின் அடிப்படையில், ஆஸ்திரேலியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஒலிம்பிக்குக்குத் தகுதிபெற்றுள்ளன.
ஆடவர் பிரிவில், இந்த ஆண்டு டிச. 31 ஆம் தேதி நிலவரப்படி, ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா மற்றும் ஓசியானியா ஆகிய கண்டங்களில் இருந்து முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2026 ஜூன் 30 ஆம் தேதி முதல் டிச. 31 வரையிலான தகுதிச் சுற்றுக் காலத்தில், தரவரிசையில் முதல் 15 இடங்களுக்குள் வந்தால், போட்டியை நடத்தும் நாடான அமெரிக்கா ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் பங்கேற்கத் தகுதி பெற்றதாக அறிவிக்கப்படும். ஒருவேளை டிச. 31 ஆம் தேதிக்குள் அமெரிக்கா தரவரிசையில் இடம்பிடிக்கவிட்டால் அட்டவணை மாற்றி அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
Seithi Punal
