சிங்கப்பூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரில் உலகின் முன்னணி வீராங்கனைகள் பலர் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
வரும் 31-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்தப் போட்டித் தொடரில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து, ஜப்பானைச் சேர்ந்த ரிகோவை எதிர்கொண்டார்.
தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து, எதிரணிக்கு எந்த வாய்ப்பும் அளிக்காமல் முழுமையான ஆதிக்கத்துடன் விளையாடினார்.
முதல் செட்டை 21-9 என்ற கணக்கிலும், அடுத்த செட்டை 21-12 என்ற வித்தியாசத்திலும் கைப்பற்றிய பி.வி. சிந்து, நேர்செட் வெற்றியுடன் காலிறுதி சுற்றுக்கு அபாரமாக முன்னேறினார். அவரது துல்லியமான ஸ்மாஷ் அடிகளும், வேகமான நகர்வுகளும் ரசிகர்களிடையே பெரும் பாராட்டை பெற்றன.
Seithi Punal
