Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'தல' அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்து: தன்னம்பிக்கையின் முன்னுதாரணம் என அண்ணாமலை புகழாரம்!

'தல' அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்து: தன்னம்பிக்கையின் முன்னுதாரணம் என அண்ணாமலை புகழாரம்!

மிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமும், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட கார் பந்தய வீரருமான (Racer) அஜித் குமார் இன்று (மே 1, 2026) தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

உழைப்பாளர் தினமான இன்று பிறந்தநாள் காணும் அவருக்கு, ரசிகர்கள், திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் எனப் பல்வேறு தரப்பிலிருந்தும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

அந்த வகையில், பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை அவர்கள், அஜித்திற்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

விடாமுயற்சியின் அடையாளம்
சமூக வலைதளமான எக்ஸ் (X) பக்கத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், அஜித்தின் வளர்ச்சி ஒரு தனி மனிதனின் அசாத்திய உழைப்பிற்குச் சான்றாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது செய்தியில் கூறியிருப்பதாவது:

"எளிய பின்னணியில் இருந்து தொடங்கி, தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடாமுயற்சி ஆகியவற்றின் மூலம், கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் நிலைத்து நிற்கும் திரு. அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரைத்துறை மட்டுமின்றி, விருப்பமான அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கி, நேர்மை, பணிவு ஆகியவற்றின் மூலம் ஒரு முன்னுதாரணமாக விளங்கும் திரு. அஜித்குமார் அவர்கள், மேலும் பல சாதனைகள் புரியவும், நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழவும், இறைவனை வேண்டிக் கொள்கிறேன்"

Seithi Punal

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithipunal