Dailyhunt
உங்கள் சாயம் வெளுத்து விட்டது... சீமானை கடுமையாக விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்!

உங்கள் சாயம் வெளுத்து விட்டது... சீமானை கடுமையாக விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்!

பிரபல திரைப்பட்ட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் 'திமுகவும், அதிமுகவும் ஓட்டுக்கு பணம் தருவதால் ஜெயிக்கிறார்கள்.

தைரியம் இருந்தால்.. பணம் தராமல் தேர்தலில் என்னுடன் மோதி ஜெயிக்க முடியுமா?' என 15 ஆண்டுகளாக கூறி வருகிறார் சீமான்.

இதோ.. ஓட்டுக்கு பணம் தராமல் ஜெயித்துள்ளார் விஜய்.

திமுக, அதிமுகவிடம் பணம் வாங்கினாலும்.. தவெகவிற்கு வாக்களித்த மக்கள் ஒருபக்கம்.

யாரிடமும் பணம் வாங்காமல் தவெகவிற்கு வாக்களித்துள்ள இளைஞர் கூட்டம் மறுபக்கம்.

நேற்று வந்த விஜய்.. பணம் தராமலே 100+ தொகுதிகளில் வென்று முதல்வர் ஆகப்போகிறார்.

ஆனால் நாதக... இதுவரை ஒரு எம்எல்ஏ கூட இல்லாமல் இருக்கிறது.

'பணம் தந்து மக்களை விலைக்கு வாங்கிட்டாங்க. சில ஆயிரம் பணத்துக்கு மக்கள் விலை போயிட்டாங்க' என உங்கள் தோல்விக்கான பழியை இனிமேல் மற்ற கட்சிகள் மீதும், மக்கள் மீதும் போட முடியாது.

உங்கள் சாயம் வெளுத்து விட்டது.

8% இல் இருந்து 4% ஆகி.. அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்து விட்டீர்கள்.

உங்களை நம்பி இருந்த மிச்சம் மீதி இளைஞர்களும் வெளியேறி விடுவார்கள்.

தவெகவின் கொள்கை தலைவரான பெரியார் மண்ணில்.. உங்கள் உளுத்துப்போன கடப்பாரை புதைக்கப்பட்டு விட்டது" என்று தெரிவித்துள்ளார்.

Seithi Punal
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithipunal