Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
விஜய்தான் முதல்வர்! அன்றே கணித்த பூஜா ஹெக்டே.. விஜய் எப்படி வெட்கப்படுறாரு பாருங்க..!

விஜய்தான் முதல்வர்! அன்றே கணித்த பூஜா ஹெக்டே.. விஜய் எப்படி வெட்கப்படுறாரு பாருங்க..!

விஜய் நடித்துள்ள ஜன நாயகன் திரைப்படம் இன்னும் சென்சார் சான்றிதழ் பெறாமல் ரிலீஸுக்காக காத்திருக்கிறது.

இதற்கிடையில், படம் இணையத்தில் லீக்கான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் படத்தை பதிவிறக்கம் செய்து பார்த்துவிட்டதாக தகவல்கள் வெளியானாலும், உண்மையான விஜய் ரசிகர்கள் "படத்தை தியேட்டரில்தான் பார்க்க வேண்டும்" என்ற நிலைப்பாட்டில் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், 2026 தமிழக சட்டசபைத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்திருப்பது அவரது ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ஜீவா உள்ளிட்ட பலரும் விஜய்யின் வெற்றியை உணர்ச்சிபூர்வமாக கொண்டாடி வருகின்றனர். பல நடிகைகள் மற்றும் திரையுலக பிரபலங்களும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜன நாயகன் படத்தின் ஹீரோயினான பூஜா ஹெக்டே வெளியிட்டுள்ள BTS (Behind The Scenes) வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே நெல்சன் இயக்கத்தில் விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்திருந்த பூஜா ஹெக்டே, அந்தப் படத்தின் "அரபிக் குத்து" பாடல் மூலம் உலகளவில் கவனம் பெற்றார். தற்போது விஜய்யின் கடைசி படமாக கூறப்படும் ஜன நாயகன் திரைப்படத்திலும் அவர் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள "தளபதி கச்சேரி" பாடல் படப்பிடிப்பு நேரத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை தற்போது பூஜா ஹெக்டே தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், "2026 தேர்தலில் யார் வெல்வார்கள்?" என்ற கேள்விக்குப் பதிலாக விஜய்யை சுட்டிக்காட்டும் காட்சி இடம்பெற்றுள்ளது.

அந்த வீடியோவை தற்போது பகிர்ந்துள்ள பூஜா ஹெக்டே, "நான் அப்பவே சொல்லிட்டேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் அந்த பதிவு ரசிகர்களிடையே வேகமாக வைரலாகி வருகிறது.

குறிப்பாக, வீடியோவில் விஜய் வெட்கப்பட்டு சிரிக்கும் காட்சி ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. "இது தான் வீடியோவின் ஹைலைட்" என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும், "சீக்கிரம் 'CM விஜய்' டைட்டில் கார்டுடன் ஜன நாயகன் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்யுங்கள்" என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

திரைப்படமும், அரசியலும் ஒன்றாக கலந்த சூழலில், ஜன நாயகன் தற்போது சாதாரண திரைப்படமாக இல்லாமல், விஜய்யின் அரசியல் பயணத்தின் ஒரு முக்கிய அடையாளமாகவே ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.

Seithi Punal
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithipunal