தென்னிந்திய திரையுலகின் 'எவர்கிரீன்' கனவுக்கன்னியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு ஒட்டுமொத்த திரையுலகையும், ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நீண்ட நாட்களாகத் த்ரிஷாவின் திருமணம் குறித்துப் பல்வேறு வதந்திகள் பரவி வந்த நிலையில், தற்போது அவர் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில், "நான் சினிமாவில் இருந்து விலகுகிறேன், ஒரு தொழிலதிபரைத் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடிவெடுத்துள்ளேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவு காட்டுத்தீயாகப் பரவி வரும் வேளையில், இது த்ரிஷாவின் நிஜ வாழ்க்கையில் எடுத்த முடிவா? அல்லது அவர் நடித்து வரும் புதிய படத்தின் விளம்பரத்திற்காக (Promotion) போடப்பட்ட பதிவா? என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்களுடன் பிஸியாகப் பல படங்களில் நடித்து வரும் த்ரிஷா, திடீரென இப்படி ஒரு முடிவை அறிவித்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இதன் உண்மைத் தன்மை என்ன என்பது குறித்த கூடுதல் தகவலுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

