Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அறிமுகப்படுத்திய போதும் அப்படி இருந்த நடிகை.! கொந்தளித்த ரசிகர்களை அடக்கிய ஜெய்சங்கர்!

அறிமுகப்படுத்திய போதும் அப்படி இருந்த நடிகை.! கொந்தளித்த ரசிகர்களை அடக்கிய ஜெய்சங்கர்!

Tamil Minutes 7 hrs ago
jaisankar

க கலைஞர்களை ஜெய்சங்கர் எந்தளவுக்கு மதித்தார் என்பதற்கு உதாரணமான ஒரு சம்பவம் தான் இது.

ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக ஜெய்சங்கர் சென்று இருந்தார்.

அந்த விழாவில் அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகையும் சென்று இருந்தார். ஜெய்சங்கர் பக்கத்தில் அவர் அமர்ந்து இருக்கும்போது கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருந்தார். அதை அவரது ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கீழே இருந்து கூச்சல் போடத் தொடங்கினர்.

அதைப் பார்த்ததும் ஜெய்சங்கர், எதனால இப்படி சத்தம் போட்டுக்கிட்டு இருக்கீங்க. அந்த நடிகை கால் மேல கால் போடுறதைப் பார்த்தா என கேட்டார். நான் அறிமுகப்படுத்தினேன் என்பதற்காக என்னுடைய அடிமையாகி விடுவாங்களா அந்த நடிகை? அவங்க எப்படி உட்காரணும்கறது அவங்க சௌகரியம்.

அதைக் கேட்க நமக்கு என்ன உரிமை இருக்கு? அதனால இதை எல்லாம் பொருட்படுத்தாம அமைதியா உட்கார்ந்து விழாவை ரசிங்க என்று அவங்கக்கிட்ட சொல்லிட்டுப் போய்விட்டார் ஜெய்சங்கர். அப்படி தன்னோட ரசிகர்களை எல்லாம் கண்டித்ததற்குப் பின்னால தன் கால் மேல் கால் போட்டு இருந்த அந்த நடிகை அதற்கு அப்புறம் காலை எடுத்து விட்டார் என்பது வேறு விஷயம்.

தானே அறிமுகப்படுத்தி இருந்தாலும் தன் கூட நடித்த நடிகர், நடிகைகளை எந்தளவுக்கு மதித்தார் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு உதாரணம். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

Author: Sankar Velu

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamil Minutes