Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
யாரெல்லாம் ஆடி அமாவாசைக்கு தர்ப்பணம் கொடுக்கலாம்? மறக்கக்கூடாத விஷயம் இதுதான்!

யாரெல்லாம் ஆடி அமாவாசைக்கு தர்ப்பணம் கொடுக்கலாம்? மறக்கக்கூடாத விஷயம் இதுதான்!

Tamil Minutes 17 hrs ago
Aadi amavasai2026

விடிஞ்சா (12.8.2026) ஆடி அமாவாசை. எல்லாரும் தர்ப்பணம் கொடுக்க காலையிலேயே நதிக்கரை, கடற்கரை, கோவில் என்று கூட்டம் கூட்டமாக குவிந்து விடுவர்.

சரி. யாரெல்லாம் இந்த தர்ப்பணம் கொடுக்கலாம்? வாங்க பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்.

தர்ப்பணத்துல 2 வகை இருக்கு. ஒன்று பிதுர் தர்ப்பணம், இன்னொன்று காருண்ய தர்ப்பணம். பிதுர் தர்ப்பணம்னா யாருக்கு செய்யணும்? எதுக்க செய்கிறோம்? எந்த நாள்ல செய்றோம்?அப்படிங்கறதை தெரிஞ்சி செய்றது. காருண்ய தர்ப்பணம்னா எப்ப இறந்தாங்கன்னு தெரியாது.

திதி என்னன்னு தெரியாது. அவங்க யாருன்னு கூட நமக்கு தெரியாது. இப்படி சம்பந்தம் இல்லாத இந்த உலக உயிர்கள் எல்லாத்துக்கும் செய்றதுக்கு பேரு காருண்ய தர்ப்பணம். வளர்த்தவர், நெருங்கிய நண்பர், நான் நல்லாருக்கணும்னு வாழ்க்கையில் நினைத்த என் பார்ட்னர்னு பலருக்கும் செய்றது தான் காருண்ய தர்ப்பணம்.

இதெல்லாம் ஆடி அமாவாசைக்கு செய்யலாம். எங்கே போய் செஞ்சாலும் யாருக்கு செய்யப் போறோம் அப்படிங்கற பேரு நீங்க ஞாபகம் வச்சிக்கோங்க. திதி தெரிஞ்சா ஞாபகம் வச்சிக்கோங்க. தெரியலன்னா அதை விட்டுருங்க. கவலையே படாதீங்க.

கோவில்ல செய்றதா இருந்தா அங்கே உள்ளவங்களே உங்களுக்கு முறைப்படி சொல்வாங்க. அதுபடியே செய்யலாம். அமாவாசை அன்னைக்கு காலையில குளிச்சிட்டு எள்ளும், தண்ணீரும் இறைச்சிட்டு கால் படாத இடத்துல அதை ஊத்திடுங்க. அதுக்கு அப்புறமா தெய்வ வழிபாட்டை வச்சிக்கோங்க. முதல்ல பிதுர் தர்ப்பணம். அதன்பிறகு தான் தெய்வ வழிபாடு. இதை மறந்துடக்கூடாது. காலையில சூரிய உதயத்துல இருந்து மதியம் 12 மணி வரைக்கும் பிதுர் தர்ப்பணம் பண்ணலாம்.

பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.

Author: Sankar Velu

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamil Minutes