Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
இன்ஸ்டா காதலை கைவிடாததால் ஆத்திரம்.. தங்கையை அடித்தே கொன்ற சகோதரன்..!

இன்ஸ்டா காதலை கைவிடாததால் ஆத்திரம்.. தங்கையை அடித்தே கொன்ற சகோதரன்..!

Tamil Spark 2 months ago

காதல் விவகாரத்தில் சகோதரியை அண்ணன் அடித்துக்கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.

ஆக்டிங் டிரைவர்:

Thoothukudi News: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தாறு, தெற்குமயிலோடை, அம்மன்கோவில் தெருவில் வசித்து வருபவர் செல்வம்.

இவரின் மனைவி எஸ்தர். தம்பதிகளுக்கு சிவஞானம் என்ற 22 வயது மகனும், அபி செல்வி என்ற 19 வயதுடைய மகளும் இருக்கின்றனர். செல்வம் இயற்கை எய்திவிட்ட நிலையில், சிவ ஞானம் ஆக்டிங் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

காதல் திருமணம் கசந்ததால் கள்ளக்காதல்.. வீடெல்லாம் ரத்த வெள்ளம்.. அரங்கேறிய பயங்கரம்.!

காதல்:

அபிசெல்வி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னதாக சேலத்தை சேர்ந்த ஹரி பிரசாத் என்பவருடன் பழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். இருவருக்கும் இடையே தொடங்கிய இன்ஸ்டாகிராம் நட்பு, பின்னாளில் காதலாக மாறி இருக்கிறது. ஹரி பிரசாத் வேறொரு சமூகத்தை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர்.

தற்கொலை முயற்சி:

இந்த விஷயம் சிவஞானத்துக்கு தெரியவரவே, சகோதரியை கண்டித்து இருக்கிறார். இதனால் மனமுடைந்துபோன அபி செல்வி, 2 ஆண்டுகளுக்கு முன்னதாக வீட்டின் மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். சிறு காயத்துடன் அவர் தப்பிவிட்ட நிலையில், மீண்டும் காதல் தொடர்ந்து இருக்கிறது.

சம்பவ இடத்திலேயே பலி:

இந்நிலையில், காதல் விவகாரம் குறித்து சிவஞானம் - அபி செல்வி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சகோதரர் தங்கையை கடுமையாக தாக்கி இருக்கிறார். இந்த சம்பவத்தில் அபி செல்வி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, தங்கை தற்கொலை செய்து உயிரிழந்ததுபோல காண்பிக்க உடலை மின்விசிறியில் தொங்கவிட்டுள்ளனர்.

கொலை உறுதி:

கொலை & தற்கொலை நாடகத்துக்குப்பின் கயத்தாறு காவல் நிலையத்துக்கு தொடர்புகொண்டு தற்கொலை குறித்து தெரிவித்துள்ளனர். நேரில் வந்த அதிகாரிகள் அபி செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மருத்துவ பரிசோதனையில் கடுமையாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனையடுத்து, கொலை வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சிவஞானம் மற்றும் எஸ்தரை கைது செய்து விசாரணை நடத்தியதில் உண்மை அம்பலமானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சோறு சமைக்கலையா? 56 வயது கள்ளக்காதலியை குத்திக்கொன்ற 28 வயது இளைஞர்.. திடுக் சம்பவம்.!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamil Spark