Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஸ்மார்ட்போன் மோகம்.. குழந்தைகள் எதிர்கொள்ளும் மறைமுக பேராபத்து.!

ஸ்மார்ட்போன் மோகம்.. குழந்தைகள் எதிர்கொள்ளும் மறைமுக பேராபத்து.!

Tamil Spark 10 hrs ago

டிஜிட்டல் திரை மோகம் குழந்தைகளின் நலனை மெல்லமெல்ல பாதித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

ஸ்மார்ட்போன்:

தெருக்கள், விளையாட்டு மைதானங்களில் முன்பு குழந்தைகள் சுறுசுறுப்புடன் விளையாடி வந்த நிலையில், தற்போது வீடுகளில் முடங்கி இருக்கின்றனர். இவர்கள் பள்ளி முடிந்து வீடு திரும்பியதும் பெற்றோரின் ஸ்மார்ட்போனை வாங்கி பயன்படுத்துவதை வாடிக்கையாக்கி இருக்கின்றனர்.

Parenting Tips: குழந்தைகளின் உயிருக்கு எமனாகும் ஆன்லைன் கேம்ஸ்.. பெற்றோர்களே உஷாரா இருங்க.!

சூரிய ஒளி:

இவ்வாறான செயல் காரணமாக குழந்தைகளின் உடல்நலனில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். தொழில்நுட்பம் குழந்தைகளின் சிறுவயதிலேயே உலகை காண்பித்தாலும், இயற்கை மற்றும் சூரிய ஒளி போன்ற விஷயங்களில் இருந்து அவர்களை தூர வைத்துள்ளது.

வைட்டமின் டி முக்கியம்:

இதனால் சிறார்களுக்கு வைட்டமின் டி குறைபாடு ஏற்பட தொடங்கி இருக்கிறது. குழந்தைகளின் எலும்பு வளர்ச்சி, தசை வலிமை, நோயெதிர்ப்பு சக்திக்கு அவசியமான வைட்டமின் டி குறைபாடு நிலையை எட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உடல் உழைப்பு இல்லாதது, 30 நிமிடங்களுக்கு குறைவாகவே வெளியில் இருப்பது காரணமாக குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு பால், தயிர், முட்டை, கீரை, கேழ்வரகு போன்றவற்றை கொடுக்க வேண்டும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இளைஞர்களின் புதிய ட்ரெண்ட்.. ஏன் ஜிம் கலாச்சாரம் வேகமாக வளர்கிறது?

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamil Spark