Dailyhunt
ஒரு காலத்துல CSK  எப்படிப்பட்ட டீம் தெரியுமா?  அஸ்வின் வருத்தம்

ஒரு காலத்துல CSK எப்படிப்பட்ட டீம் தெரியுமா? அஸ்வின் வருத்தம்

சென்னை சூப்பர் கிங்ஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக 2-வது தோல்வியை பதிவு செய்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சென்னையின் டாப் ஆர்டரின் சொதப்பல் காரணமாக 127 ரன்களுக்கு அந்த அணி சுருண்டது.

128 என்ற இலக்கை ராஜஸ்தான் அணி 12.1 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. இந்நிலையில் தான் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை நேற்று எதிர்க்கொண்டது. முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது.

210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி முதல் ஓவரில் இருந்தே சரவெடியாக வெடித்தது. முதல் ஓவரில் 14 ரன்கள் 2-வது ஓவரில் 20 ரன்கள் என 2 ஒவர்களில் 34 ரன்கள் எடுத்து மிரட்டினர். பஞ்சாப் கிங்ஸ் அணி 18.4 ஓவர்களில் இலக்கை எளிதாக எட்டியது. 209 ரன்கள் எடுத்தும் சிஎஸ்கேவால் டிபெண்ட் செய்ய முடியாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் அஸ்வின் பேசுகையில் "நான் தனிப்பட்ட முறையில் எந்த வீரரையும் குறை சொல்ல மாட்டேன். ஆனால்..சென்னை சூப்பர் கிங்ஸ் எப்படி பட்ட டீம் தெரியுமா? எனக்கு கஷ்டமா இருக்கு பார்க்க. ஒரு டைம்ல எப்படி இருந்த டீம். நான் மேட்ச் ஸ்டேடியத்தில் இருந்து பார்த்தேன். சென்னைன்னா ஒரு கர்வம் வெச்சுக்கிட்டு வாழுற ஆள் நான். 12-வது ஓவர் எல்லாருக்கும் தோள்பட்டை இறங்கிடுச்சு. அதை பார்க்கும் போது அவ்வளவு வருத்தமாக இருந்தது. ஏனென்றால் அனுபவம் இல்லாத இளம்வீரர்கள். அவர்கள் உடல்மொழியே நமக்கு காட்டிக்கொடுத்துவிடும். நான் கிரிக்கெட் விளையாடி விட்டு கிரிக்கெட்டை பற்றி பேசுகிறேன். நான் பேசினால் அதில் கிரிக்கெட் இருக்கும். நான் ரசிகர்கள் மாதிரி பேசமுடியாது. நான் கிரிக்கெட் எக்ஸ்பேர்ட். நீங்க என்ன கிரிக்கெட் எக்ஸ்பேர்ட் அப்படின்னு ஏத்துகலைன்னாலும் எனக்கு கவலை இல்லை. எனக்கு ஓரளவுக்கு கிரிக்கெட் தெரியும் அந்த கண்ணோட்டத்தில் கிரிக்கெட்டை பார்க்கிறேன். நான் அப்படி பார்க்கும் போது நான் எதோ தப்பா இருக்கிறது என உணர்கிறேன். தல தோனி கூட மைதானத்துக்கு வரலைன்னு எனக்கு வருத்தம் தான். எனக்கு கஷ்டமா இருந்தது." என்றார்.

: 209 ரன்கள் அடித்தும் CSK தோற்றது எப்படி? ருதுராஜ் செய்த தவறு என்ன?
போட்டி பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ருதுராஜ் கெய்க்வாட். பந்துவீச்சாளர்களை சாடினார். இது ஒரு நல்ல ஸ்கோர்தான். விக்கெட் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான இருந்தது. பெரிய பவுண்டரிகள் இருந்ததால், இது ஒரு நல்ல ஸ்கோர் என்று நினைத்தேன். எங்களிடம் 3 வேகபந்துவீச்சாளர்கள், 2 சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தது உதவியாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் பந்துவீச்சாளர்களுக்கு இது மோசமான நாளாக இருந்தது. எங்களால் அழுத்தம் கொடுக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் தேவையான ரன்-ரேட் 11 ஆக உயர்ந்தது. மேலும் சில நல்ல ஓவர்கள் அதை 12-13 ஆக கொண்டு சென்றிருக்கலாம். நிறைய பாசிட்டிவான விஷயங்கள் உள்ளன. ஆயுஷ் அருமையாக பேட்டிங் செய்தார். சிவம் உண்மையில் நன்றாக பேட்டிங் செய்தார். பேட்டிங் அடிப்படையில், எங்களிடம் நல்ல நம்பிக்கை இருந்தது. பந்துவீச்சில், மேம்படுத்த நிறைய இருக்கிறது." என்றார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Times Now Seithi