Tamil Puthandu Vazhthukkal 2026: ஏப்ரல் மாதம் 14, செவ்வாய்க்கிழமை அன்று, தமிழ் புத்தாண்டான பராபவ ஆண்டு பிறக்கிறது.
ஆங்கிலப் புத்தாண்டு போலவே, தமிழ் புத்தாண்டும் கோலாகாலமாகக் கொண்டாடப்படும். மகிழ்ச்சியும் வாழ்த்துக்களை பகிர்வது, புதிய உற்சாகத்தையும், நம்பிக்கையையும் தரும். நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு, அழகான, புத்தாண்டை சிறப்பானதாக்கும் வார்த்தைகளால் வாழ்த்த விரும்புகிறோம். எனவே, இந்த அழகான வாழ்த்துக்களுடன் தமிழ் புத்தாண்டை வரவேற்போம். உங்கள் அன்புக்குரியவர்களுக்கு தெரிவிக்க, 2026 தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்திகள் இங்கே!
50+ Tamil NewYear 2026 Wishes and Greetings in Tamil
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும், வளத்தையும் அள்ளித் தரட்டும்.
புதிய நம்பிக்கைகளுடன் பிறக்கும் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு, உங்கள் வாழ்வில் புதிய திருப்பங்களையும் வெற்றிகளையும் கொண்டு வர வாழ்த்துகிறேன்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! இந்த வருடம் முழுவதும் ஆரோக்கியமும், செல்வமும், அமைதியும் உங்களைச் சூழ்ந்திருக்கட்டும்.
அறுசுவை கலந்த வேப்பம்பூ பச்சடி போல, உங்கள் வாழ்விலும் இன்பமும் துன்பமும் சமமாக அமைந்து, இறுதியில் வெற்றி கிட்டும் ஆண்டாக அமையட்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
Tamil Puthandu 2026: பராபவ ஆண்டு எப்படி இருக்கும்? பொதுப்பலன்...
கனிகாணும் நல்வேளையில், உங்கள் இல்லத்தில் மங்கலங்கள் பொங்கட்டும். சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துகள்!
வாசல் தெளித்து கோலமிட்டு, புது ஆடை உடுத்தி கொண்டாடும் இந்தச் சித்திரை திருநாள், உங்கள் மனதை மகிழ்ச்சியால் நிரப்பட்டும்.
பழைய கவலைகளை மறந்து, புதிய இலக்குகளை நோக்கிப் பயணிக்க இந்தத் தமிழ்ப் புத்தாண்டு ஒரு நல்வாய்ப்பாக அமையட்டும். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
உங்கள் கனவுகள் அனைத்தும் நனவாகவும், எடுத்த காரியத்தில் வெற்றி பெறவும் வாழ்த்துகிறேன். இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்திகள் - Tamil Puthandu Vazhthukkal 2026
கடந்த வருடத்தை புன்னகையுடன் விடைபெற்று, புதிய ஆரம்பங்களையும் நம்பிக்கைகளையும் கொண்ட தமிழ் புத்தாண்டை வரவேற்போம். இந்த இனிய நாளில், உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, ஆரோக்கியம், செல்வம் ஆகிய அனைத்தும் நிலைத்து நிறையட்டும். இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
கடந்த வருடத்திற்கு புன்னகையுடன் விடை கொடுத்து, நாளையை புதிய நம்பிக்கைகளுடன் வரவேற்போம். 2026 உங்களுக்கு மகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் தரட்டும்.
மகிழ்ச்சி, ஆரோக்கியம், செல்வம் ஆகிய அனைத்தும் உங்கள் இல்லத்தில் நிரந்தரமாகத் தங்கட்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
கவலைகளை மறந்து, மகிழ்ச்சியை வரவேற்போம்!
இந்த தமிழ் புத்தாண்டில் நம் நட்பு இன்னும் பல நினைவுகளை உருவாக்கட்டும்.
வாழ்க்கை ஒரு புத்தகம் என்றால்,
இந்த ஆண்டு அதன் சிறந்த அத்தியாயமாக இருக்கட்டும் நண்பா!
கஷ்டத்திலும் தோள் கொடுக்கும் உனக்கு,
இந்த ஆண்டு வெற்றிகள் மட்டும் சேரட்டும்.
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!
ஒரு வரியில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் - Short and Sweet Tamil Newyear Wishes in Tamil in One Line
- வருடம் புதியது, ஆனால் ஸ்டைல் பழையது! இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
- 2026: கனவுகள் நனவாகும் ஆண்டு, பராபவ வருடம் மகிழ்ச்சியை அள்ளி கொடுக்கட்டும்.
- அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
- எனது இன்ஸ்டாகிராம் குடும்பத்திற்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
- எனது Facebook குடும்பத்திற்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
- எனது யூடியூப் குடும்பத்திற்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
- உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் 2026 தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

