Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Tamil Puthandu Kavithai: அழகு தமிழில் புத்தாண்டு வாழ்த்துக் கவிதை, மேற்கோள்கள், அழகான செய்திகள்!

Tamil Puthandu Kavithai: அழகு தமிழில் புத்தாண்டு வாழ்த்துக் கவிதை, மேற்கோள்கள், அழகான செய்திகள்!

Tamil Newyear 2026 Kavithai: தமிழ் புத்தாண்டு, பராபவ ஆண்டு பலருக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டு பிறப்பும், ஒவ்வொருவருக்கும் புதிய நம்பிக்கையையும் புதிய வாய்ப்பையும் கொண்டு வரும். தமிழ் புத்தாண்டின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள, நெருக்கமானவர்களுக்கும் நண்பர்களுக்கும் அழகான புத்தாண்டு வாழ்த்துக்களைக் கூற விரும்புகிறார்கள். உங்கள் அன்புக்குரியவர்களுடன் பகிர்ந்து கொள்ள, ஸ்டேட்டஸ் வைக்க, அழகான கவித்துவமான தமிழ் புத்தாண்டு வாழ்த்துக் கவிதைகள்.

ஏப்ரல் 14, 2026 அன்று பிறக்கும் பராபவ வருட தமிழ் புத்தாண்டு கவிதைகள் இதோ!

New Year 2026 Kavithai in Tamil: தமிழ் புத்தாண்டு கவிதைகள், கவித்துவமான வாழ்த்துக்கள்

வெற்றியின் தொடக்கம்
வாழ்க்கையில் வெற்றியும்
மன நிறைந்த மகிழ்ச்சியும்
எல்லா நலன்களும்
இந்த 2026 பராபவ புத்தாண்டு உங்களுக்கு வழங்கட்டும்
என்றென்றும் இறைவருள் துணையாக இருக்கட்டும்!
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
____
வசந்தத்தின் வரவு
மீண்டும் வந்தது வசந்தம்,
சொற்களாக மலர்கிறது பூங்காற்று,
இசையாய் நிறைந்த உங்கள் வாழ்வில்
அன்பும் அமைதியும் இனிதாய் பூக்கட்டும்
இனிய 2026 தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!
___
நிம்மதியான ஆண்டு
விருப்பங்கள் நிறைவேறும்,
மனநிம்மதி பெருகும்,
சந்தோஷம் வழிந்தோடும்
ஒரு அழகான புத்தாண்டாக
இந்த பராபவ வருடம் அமையட்டும்!
மனமார்ந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

----
புதிய பக்கம்
புதிய ஆண்டு பிறக்கிறது,
புதுமைகள் தொடங்குகிறது
வாழ்க்கையின் புத்தகத்தில்
இன்னொரு பக்கம் திரும்புகிறது.
அந்தப் பக்கம் மகிழ்ச்சியால் மட்டுமே நிறையட்டும்!
இனிய 2026 புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
---
மாற்றத்தின் வாசல்
வசந்தத்தின் வாசல் திறக்க
மலர்ந்த பூக்கள் நறுமணம் வீச
புதிய தொடக்கம், புதிய வளர்ச்சி
2026 வரவேற்கிறது இனிய மாற்றத்தை!
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!
---
நட்சத்திர புன்னகை
நிலவில் மலர்ச்சி,
நட்சத்திரத்தில் புன்னகை,
காற்றில் இனிமை,
உங்கள் வாழ்வில் அனைத்தும் நலமாய் அமையட்டும்.
இந்த புத்தாண்டு உங்களுக்கு
நிறைந்த சந்தோஷங்களை வாரி வழங்கட்டும்!
---
தமிழ் வாழ்க! நல்வாழ்வு சூழ்க!
பிறந்தது புத்தாண்டு,
பிறக்கட்டும் நன்மைகள்,
பசுமை நிறைந்த வாழ்வில்
புத்தம் புதிய கொண்டாட்டம்.
வெற்றியின் பாதையில்,
காலம் நம்மை அழைத்துச் செல்லும்!
வாழ்க தமிழ், வாழ்க நல் வாழ்வு!
இனிய 2026 தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
---
பராபவ ஆண்டு எப்படி இருக்கும்?

நம்பிக்கை ஒளி
புதிதாய் விடியும் வானம் போல,
புதிய நம்பிக்கை ஒளியால் நிறையட்டும்.
உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளும்
பூமலர் சிரிப்பாய் மலரட்டும்!
இனிய பராபவ வருட புத்தாண்டு வாழ்த்துகள்!
----
அமைதியான வருடம்
மனதை மெல்ல தூய்மைப் படுத்தும்
இந்த 2026-ஆம் வருடம் உங்களுக்கு
எந்தச் சுமையுமின்றி இனிமையாகச் செல்லட்டும்!
----
அன்பும் பாசமும்
என்றென்றும் நிறைந்திருக்க,
இந்த புத்தாண்டு உங்கள் குடும்பத்தில்
நலமும் வளமும் செழிக்கச் செய்யட்டும்!
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!
----

  • வெளிச்சமான பாதை
  • கண்களில் சோகம் இல்லாமல்,
  • மனதில் குழப்பம் இல்லாமல்,
  • புத்தாண்டு ஒவ்வொரு நாளும்
  • வெற்றி வெளிச்சமாய் மலரட்டும்.

உங்களுக்கு இனிய 2026 தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

செல்வச் செழிப்பான வாழ்க்கையைத் தரும் அட்சய திருதியை
புத்தாண்டு வாழ்த்துச் செய்திகள், மேற்கோள்கள் மற்றும் கவிதைகள் மூலம், உங்கள் அன்புக்குரியவர்களின் முகத்தில் புன்னகையை வரவழைக்கலாம். இந்த கவிதைகளில், அழகிய வாழ்த்து செய்திகளில் உங்களுக்கு பிடித்தமான செய்தியைத் தேர்ந்தெடுத்து, உங்கள் மனம் கவர்ந்தவர்களுக்கு மகிழ்ச்சியான புத்தாண்டு வாழ்த்துக்களை சொல்லுங்கள்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Times Now Seithi