Thulam Guru Peyarchi Palan 2026 ஜூன் மாதம் இரண்டாம் தேதி குரு பெயர்ச்சி நடக்கிறது. மிதுன ராசியில் 9-ம் வீட்டில் சஞ்சரித்து வந்த குரு பகவான், இப்போது உங்கள் ராசிக்கு 10வது வீடான கடக ராசிக்குச் சென்று அங்கு உச்சம் பெறுகிறார்.
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி 10வது இடம் என்ற கர்ம ஸ்தானத்தில் நிகழ்ந்தாலும், குரு அங்கு உச்சம் பெறுவதால் 'தொழில் குரு' பலன்களைத் தந்து, உங்கள் வாழ்வாதாரத்திலும் வியாபாரத்திலும் மிகப்பெரிய திருப்புமுனைகளை ஏற்படுத்தப் போகிறது.
Guru Peyarchi Palangal 2026 - 2027 - துலாம் ராசிக்கு 10வது வீட்டில் குரு பெயர்ச்சி
துலாம் ராசிக்கு 10-ம் இடம் என்பது ஜீவன, கர்ம ஸ்தானம் (தொழில், வேலை) ஆகும். பொதுவாக "பத்தில் குரு வந்தால் பதவிக்கு ஆபத்து" என்று சொல்வதுண்டு, ஆனால் குரு தனது உச்ச வீடான கடகத்தில் அமர்வதால் கெடுபலன்கள் முற்றிலும் நீங்கி, ராஜயோக பலன்களே நடக்கும். தொழிலில் இருந்த மந்த நிலை, வேலை இழப்பு பயம் அனைத்தும் விலகி, புதிய பொறுப்புகளும் அதிகாரமும் உங்களைத் தேடி வரும்.
Rishabam Guru Peyarchi Palan 2026: ரிஷபம் குரு பெயர்ச்சி பலன்கள் 3ம் இடத்தில் உச்சம் பெறும் குரு; தைரியமும், புதிய முயற்சிகளும் வெற்றி தரும் காலம்!
குரு பெயர்ச்சி 2026 - 2027 துலாம் ராசிக்கு பொதுப்பலன் - Thulam Jupiter Transit General prediction
- உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு தடையின்றி கிடைக்கும்.
- சுய தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்குப் புதிய ஆர்டர்கள், வாடிக்கையாளர்கள் கிடைத்து, தொழில் புதிய உயரத்தைத் தொடும்.
- சமுதாயத்தில் உங்களின் கௌரவம், அந்தஸ்து மற்றும் கீர்த்தி பன்மடங்கு உயரும்; பெரிய மனிதர்களின் ஆதரவு எப்போதும் இருக்கும்.
- வேலை இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த இளைஞர்களுக்கு, அவர்களின் தகுதிக்கு ஏற்றவாறு நல்ல நிறுவனத்தில் உயர்தர வேலை அமையும்.
- பூர்வீகத் தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்து, அதில் எதிர்பார்த்ததை விட நல்ல லாபத்தை ஈட்டுவீர்கள்.
- அரசு வழி விவகாரங்கள் மற்றும் அரசாங்கத்திடம் இருந்து வரவேண்டிய அனுமதிகள் சாதகமாக முடிவடையும்.
குரு பெயர்ச்சி 2026 - 2027 துலாம் ராசிக்கு குரு பார்வையின் பலன்
குருபகவான் உங்கள் ராசிக்கு 2-வது வீடான விருச்சிக ராசியை பார்ப்பதால, பண வரவு மிக திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் இருந்த சண்டைகள், வாக்குவாதங்கள் நீங்கி மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். வங்கிக் சேமிப்பு உயரும்.
குருபகவான் உங்கள் ராசிக்கு 4-வது வீடான மகர ராசியை பார்ப்பதால், புதிய வீடு, மனை அல்லது சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் குணமாகும். சொகுசு வாகன சேர்க்கை ஏற்படும்.
குரு பகவான் உங்கள் ராசிக்கு 6-வது வீடான மீன ராசியைபார்ப்பதால்: குரு தனது சொந்த வீடான 6-ம் இடத்தைப் பார்ப்பதால் நீண்ட நாள் கடன் சுமைகள் படிப்படியாகக் குறையும். மறைமுக எதிரிகள் மற்றும் உங்களை வீழ்த்த நினைத்தவர்களின் சூழ்ச்சிகள் முறியடிக்கப்படும்.
Dhanusu Guru Peyarchi Palan 2026: தனுசு குரு பெயர்ச்சி பலன்கள் 8வது இடத்தில் உச்சம் பெறும் ராசி நாதன்; விபரீத ராஜயோகமும், அசுர வளர்ச்சியும் உண்டாகும்!
குரு பெயர்ச்சி 2026 - 2027 துலாம் ராசிக்கு குரு பெயர்ச்சியில் கவனமாக இருக்க வேண்டிய 3 விஷயங்கள்
10வது வீட்டில் குரு இருப்பதால் வேலைப்பளு மற்றும் பொறுப்புகள் அதிகரிக்கும் என்பதால், குடும்பத்திற்காக நேரம் ஒதுக்குவது கடினமாக இருக்கலாம்; குடும்பத்தினரை அரவணைத்துச் செல்லவும்.
தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் அதே நேரத்தில், புதிய முயற்சிகளுக்காக அதிக அளவில் முதலீடு செய்யும் போது அனுபவசாலிகளின் ஆலோசனையைக் கேட்பது நல்லது.
உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் பேசும் போது நிதானம் தேவை; உங்களின் அதீத வளர்ச்சியால் சிலர் மறைமுகத் தொல்லைகளைத் தர முயலலாம் என்பதால் எச்சரிக்கை அவசியம்.
குரு பெயர்ச்சி 2026 - 2027 - பரிகாரம், வழிபாடு
வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை சுண்டல் நிவேதனம் செய்து வழிபடுவதும், சனிக்கிழமைகளில் அனாதாஸ்ரமங்கள் அல்லது ஏழைகளுக்கு உங்களால் இயன்ற பண உதவி அல்லது உணவு வழங்குவது தொழிலில் இருக்கும் தடைகளை நீக்கி வெற்றியைத் தரும்.
Disclaimer: இந்தப் பதிவு ஆன்மீக மற்றும் ஜோதிட நம்பிக்கைகளின் படி எழுதப்பட்டதாகும். இதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களுக்கு அறிவியல் தொடர்பான விளக்கம் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

