#BREAKING : பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி..!

#BREAKING : பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி..!

Top Tamil News

Top Tamil News

4d

Loading...

சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் லீக் போட்டியில் (ஏப். 3) சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வி அடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இதனால், முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் குவித்தது.

பின்னர் 210 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பிரியான்ஷ் ஆர்யா சாஹலுக்குப் பதிலாக இம்பேக்ட் சப் வீரராக களம் இறங்கினார். முதல் ஓவரை கலீல் அகமது வீசினார். இந்த ஓவரில் பிரியான்ஷ் ஆர்யா ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசினார். இதனால் பஞ்சாப் அணிக்கு 14 ரன்கள் கிடைத்தன. 2-வது ஓவரை ஹென்றி வீசினார். இந்த ஓவரில் பிரியான்ஷ் ஆர்யா 2 பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடிததார். பிரப்சிம்ரன் சிங் ஒரு பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் பஞ்சாப் அணிக்கு 20 ரன்கள் கிடைத்தன. 2 ஓவரில் 34 ரன்கள் அடித்தன. 3-வது ஓவரை கலீல் அகமது வீசினார். இந்த ஓவரில் பிரியான்ஷ் ஆர்யா ஒரு சிக்ஸ் அடித்தார். இந்த ஓவரில் கலீல் அகமது 9 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.4-வது ஓவரை கம்போஜ் வீசினார். இந்த ஓவரில் பிரப்சிம்ரன் சிங் 3 பவுண்டரிகள் விளாசினார். கம்போஜ் 12 ரன்கள் விட்டுக்கொடுத்தார். 4-வது ஓவரை ஹென்றி வீசினார். முதல் பந்தில் சிக்ஸ் விளாசிய பிரியான்ஷ் சிங், அடுத்த பந்தில் க்ளீன் போல்டானார். அவர் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 11 பந்தில் 39 ரன்கள் குவித்தார்.

இறுதியில் 18.4 ஓவரில் 210 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News

Comments

2
Loading comments...