"இபிஎஸ் முதலமைச்சராக மாட்டார்... ஆளுநராவார்"- கனிமொழி

"இபிஎஸ் முதலமைச்சராக மாட்டார்... ஆளுநராவார்"- கனிமொழி

Top Tamil News

Top Tamil News

2hr

Loading...

தேர்தல் முடிந்த பிறகு எடப்பாடி பழனிச்சாமி ஏதோ ஓர் மாநிலத்தில் கவர்னர் ஆவதற்கு வாய்ப்பு உள்ளது என திமுக எம்பி கனிமொழி ஆரணி பிரச்சாரக் கூட்டத்தில் பேசி உள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மகாலட்சுமியை ஆதரித்து ஆரணி அண்ணாசிலை முன்பு திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி, "திராவிட முன்னேற்றக் கழக சார்பில் உங்களிடம் ஓட்டு கேட்கும் போது உரிமையோடு வந்து ஓட்டு கேட்கிறோம். கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி உள்ளோம் என்று மகிழ்ச்சியோட மனநிறையோடு உங்களிடம் வந்து வாக்கு சேகரிக்கின்றோம். ஒவ்வொருவருக்கும் பல திட்டங்களை அறிவித்தவர் நம் முதல்வர் மகளிர் உரிமை தொகை திட்டம், தமிழ் முதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், இது போன்ற பல்வேறு திட்டங்களை இதுபோன்று எத்தனையோ திட்டங்களை செயல்படுத்தி வெற்றி கண்ட முதல்வர் நம் முதல்வர் எதிரணியில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி ஏதாவது ஒரு திட்டத்தை மக்களுக்கு செய்திருக்கிறாரா எடப்பாடி என்ன திட்டம் ஓபிஎஸ்ஐ வெளியே அனுப்புவது தான் அவரது முதல் திட்டம் எடப்பாடிக்கு முன்பு முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ்ஐ திட்டம் தீட்டி வெளியே அனுப்பிய பின்பு ஓபிஎஸ் தற்போது நம்மோடு இணைந்து கொண்டு உள்ளார்.

நம்முடைய முதலமைச்சரால் மட்டும்தான் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும் என்று ஓபிஎஸ் நம்மோடு இணைந்து கொண்டு உள்ளார். அடுத்த திட்டம் யார் காலில் விழுந்து முதலமைச்சர் ஆனாரோ யாருடைய ஆசீர்வாதம் வேண்டும் என்று முதலமைச்சர் ஆனாரோ அந்த சசிகலாவை அதிமுகவிலிருந்து வெளியேற்றியது அடுத்த திட்டம். அடுத்த திட்டம் அதிமுகவை டெல்லியில் அடமானம் வைக்கும் திட்டம். அதிமுகவை அமித் ஷா திமுக என்றும் மாற்றக்கூடிய அடுத்த திட்டம் இது மட்டும் தான் எடப்பாடியின் திட்டங்கள். எடப்பாடிக்கு தமிழ்நாட்டின் மீது அக்கறை இல்லை அதிமுக அவர் கையில் இருக்கணும் அதற்கு அவர் எதை வேண்டுமானாலும் செய்வார். தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்வார். ஆனால் பிஜேபியுடன் கூட்டணி வைத்துள்ள எல்லாரையும் நாம் பார்த்திருக்கிறோம் அவங்க கட்சி அவங்களோட இருந்ததே கிடையாது. தேர்தல் முடிந்தவுடன் ஏதாவது ஒரு மாநிலத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி கவர்னர் ஆவார். எடப்பாடி யாருடன் கூட்டணி வைத்துள்ளார் தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்யக்கூடிய பிஜேபியுடன் தான் எடப்பாடி கூட்டணி வைத்துள்ளார். பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் பெயரைக் கூட சொல்ல மனசு இல்லை அந்த பிஜேபியோட எடப்பாடி கூட்டணி வைத்துள்ளார். பிஜேபி அரசு விவசாயிகளுக்கும் எதிரான மசோதாக்களை கொண்டு வந்த அரசு இஸ்லாமியர் கிறிஸ்தவர்களுக்கு எதிராக மசோதாக்களை கொண்டு வந்த அரசினை விமர்சிக்காதவர்" என்றார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News

Comments

1
Loading comments...