ரசிகர்கள் ஷாக்..! சன் டிவி கயல் சீரியல் நடிகை தற்கொலை..!

ரசிகர்கள் ஷாக்..! சன் டிவி கயல் சீரியல் நடிகை தற்கொலை..!

Top Tamil News

Top Tamil News

1d

Loading...

சென்னை போரூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சுபாஷினி பாலசுப்பிரமணியம் வயது 36. இவர் ஒரு நடிகை.

பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் கயல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சுபாஷினி. இலங்கையில் பிறந்த இவர், சில ஆண்டுகளுக்கு முன் பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் பிப்பின் என்பவரை காதலித்து மணந்தார்.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் இவர், நேற்று இரவு தனது கணவருடன் வீடியோ கால் பேசிய போது ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சுபாஷினியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் நடந்த நாளுக்கு முன்புவரை சுபாஷினி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்ததாக கூறப்படுகிறது. வழக்கம்போல தான் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. ஆனால், ஒரு குடும்ப பிரச்சனை... ஒரு மன அழுத்தம்... தவறான நிமிடம்... அதுவே அவருடைய வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டது. அவரது கணவருடன் நடந்த வீடியோ கால் பேச்சின் போது ஏற்பட்ட தகராறு தான் இந்த துயர முடிவுக்குக் காரணம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News

Comments

6
Loading comments...