Dailyhunt
60 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்? விஜய்யின் முடிவு என்ன?

60 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்? விஜய்யின் முடிவு என்ன?

TV9 Tamil 1 week ago
சென்னை, மே 6 :  தமிழ்நாட்டில் 108 இடங்களில் வெற்றிபெற்றுள்ள தமிழக வெற்றி கழகம் ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில்,  பெரும்பான்மையை நிரூபிக்க தவெக மற்ற கட்சிகளுடன் பேசி வருகிறது.
மேலும் மே 6,  2026 அன்று ஆட்சியமைக்க உரிமை கோர தவெக தலைவர் விஜய் ஆளுநரை சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தவெகவிற்கு காங்கிரஸ் முழு ஆதரவளித்துள்ளது. இதனையடுத்து காங்கிரஸ் - திமுக கூட்டணி முறிந்தது. இந்த நிலையில் காங்கிரஸ் உடனான கூட்டணி பேச்சுவார்த்தையின் போது அக்கட்சிக்கு 1 அமைச்சர் பதவி வழங்க விஜய் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

60 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்?

இந்த 2026 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 5 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ள நிலையில் அதில் ஒருவருக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தமிழ்நாட்டில் 60 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டு அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெறவுள்ளதாத தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றொரு பக்கம் அதிமுகவுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும இதற்காக தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த  தகவல் இரு தரப்பிலும் உறுதிபடுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யை சந்தித்து ஆதரவு கடிதத்தை வழங்கிய காங்கிரஸ் தலைவர்கள்

 

இதற்கிடையில் மே 7, 2026 அன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தவெக தலைவர் விஜய்யின் பதவியேற்பு விழா நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக மே 6, 2026 மாலை தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆட்சியமைப்பதற்கான கடிததத் அவர் அளிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதனையடுத்து ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் சென்னை வந்துள்ளார். காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை தவெக தலைவர் விஜய்யிடம் காங்கிரஸ் தலைவர்கள் வழங்கினர். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டடோர் விஜயை சந்தித்து ஆதரவு கடிதம் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil