Dailyhunt
Abhishan Jeevith: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு நன்றி சொல்ல விரும்புகிறேன் - அபிஷன் ஜீவிந்த்!

Abhishan Jeevith: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு நன்றி சொல்ல விரும்புகிறேன் - அபிஷன் ஜீவிந்த்!

TV9 Tamil 2 months ago
யக்குநராக நுழைந்து தற்போது கதாநாயகனாக படத்தில் நடித்துவருபவர் அபிஷன் ஜீவிந்த் (Abhishan Jeevinth). இவர் சசிகுமார் Sasikumar) மற்றும் சிம்ரன் (Simran) இணைந்து நடித்த டூரிஸ்ட் பேமிலி என்ற படத்தை இயக்கியதன் மூலமாக சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார்.
இந்த படமானது கடந்த 2025ம் ஆண்டு மே மாதத்தில் வெளியாகியிருந்த நிலையில், நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்து தனது இரண்டாவது படமான வித் லவ் (With Love) மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை இயக்குநரும், தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் (Soundarya Rajinikanth) தயாரிக்க, அறிமுக இயக்குநர் மதன் இயக்கியுள்ளார். இப்படத்தில் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடித்துள்ள நிலையில், அவருக்கு ஜோடியாக இளம் நடிகை அனஸ்வரா ராஜன் (Anaswara Rajan) நடித்துள்ளார். இந்த படமானது வரும் 2026 பிப்ரவரி 6ம் தேதியில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது. இதை முன்னிட்டு நேற்று 2026 ஜனவரி 31ம் தேதியில் இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றிருந்தது. அந்த நிகழ்ச்சியின்போது மேடையில் பேசிய அபிஷன் ஜீவிந்த், ரஜினிகாந்த் குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். டீசருக்கு பேராதரவு கொடுத்த மாண்புமிகு மக்களுக்கு நன்றி - கராத்தே பாபு படக்குழு

ரஜினிகாந்த் குறித்து நெகிழ்ச்சியாக பேசிய அபிஷன் ஜீவிந்த் :

அந்த நிகழ்ச்சியின்போது பேசிய அபிஷன் ஜீவிந்த், "நான் முதல் முதலாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். வித் லவ் திரைப்படமானது ஒரு அழகான ஸ்கிரிப்ட். என் இயக்குநர் மதன் எவ்வாறு இவ்வளவு அழகான காட்சியை எழுதுகிறார் என்று எனக்கு மிகவும் பொறாமையாக இருக்கிறது. மேலும் இப்படத்தின் ஷூட்டிங் முடித்ததும் சாதாரணமாக நான் மெட்ரோவில் பயணம் செய்தபோது, இப்படத்தின் ப்ரோமோஷன்களை பார்க்கிறேன். அதை செய்தும் எனது தயாரிப்பாளர்களுக்கு நன்றி" என அவர் அதில் தெரிவித்துள்ளார்.

வித் லவ் படத்தின் ட்ரெய்லர் குறித்து  அபிஷன் ஜீவிந்த் எக்ஸ் பதிவு :

அபிஷன் ஜீவிந்த் ஏற்கனவே முன்னதாகவே ஒரு நேர்காணலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து தெரிவித்துள்ளார். அதில் அவர் தனது 2வது படத்திலே ஹீரோவாக நடிக்கவேண்டாம் என ஆரம்பத்தில் நினைத்ததாகவும், ஹீரோவாக சில ஆண்டுகளுக்கு பிறகு படத்தில் நடிக்கலாம் என அவர் நினைத்ததாக கூறினார். தலைவர் 173 படத்தை என்னால் முடிக்க முடியுமா என்று பலருக்கும் சந்தேகம் உள்ளது - இயக்குநர் சிபி சக்ரவர்த்தி ஓபன் டாக் பின் ரஜினிகாந்தை நேரில் சந்தித்ததும் அவர், "நீங்க பக்கா ஹீரோ மெட்டீரியல்" என அபிஷன் குறித்து கூறினாராம். அதற்கு பிறகே ஹீரோவாக நடிக்க படத்தில் ஒத்துக்கொண்டதாக அவர் அதில் தெரிவித்திருந்தார். இவ்வாறு தான் ஹீரோவாக படத்தில் நடிப்பதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான காரணம் என்றும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil