Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அஜித் குமாருடன் முதல்முறையாக கூட்டணி சேரும் இயக்குநர் சங்கர்? வைரலாகும் தகவல்

அஜித் குமாருடன் முதல்முறையாக கூட்டணி சேரும் இயக்குநர் சங்கர்? வைரலாகும் தகவல்

TV9 Tamil 1 month ago
மிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி அடுத்தடுத்து தொடர்ந்து பான் இந்திய மொழிகளில் படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் சங்கர். இவர் தமிழ் சினிமாவில் கடந்த 1983-ம் ஆண்டு முதல் தனது இயக்குநர் பணியைத் தொடங்கினார்.
இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலாக இயக்கிய படம் ஜென்டில்மேன். இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆன இவர் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கி உள்ளார். அதன்படி தமிழ் மொழியில் இயக்குநர் சங்கர் இயக்கத்தில் அடுத்தடுத்து காதலன், இந்தியன், முதல்வன், ஜீன்ஸ், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன் என பல ஹிட் படங்களை இயக்கி உள்ளார். தொடர்ந்து ஹிட் படங்களை பல முன்னணி நடிகர்களை வைத்து இயக்கிய இயக்குநர் சங்கர் இயக்கத்தில் இறுதியாக திரையரங்களில் வெளியான படம் கேம் சேஞ்சர். தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நடிகர் ராம் சரண் இந்தப் படத்தில் நாயகனாக நடித்து இருந்த நிலையில் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதற்கு முன்னதாக வெளியான இந்தியன் 2 படமும் ரசிகர்களிடையே நெகட்டிவ் விமர்சனத்தைப் பெற்றது. இந்த நிலையில் இயக்குநர் சங்கர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக உள்ள படம் தொடர்பான அப்டேட் வெளியாகி உள்ளது.

அஜித் குமாருடன் முதல்முறையாக கூட்டணி சேரும் இயக்குநர் சங்கர்?

அஜித் குமாரும் இயக்குனர் சங்கரும் ஒரு திரைப்படத்திற்காக இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் அஜித் குமார் டேர் டெவில் மற்றும் மங்காத்தா 2 ஆகிய படங்களை முடித்த பிறகு, பட்ஜெட் மற்றும் திரைக்கதை ஆகியவை சரியாக அமைந்தால் சங்கருடனான படம் தொடங்கப்படலாம் என்று தெரிகிறது. இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய படங்கள் சந்தித்த பின்னடைவுகள் காரணமாகவும், வேள்பாரி படத்தின் பட்ஜெட் மிக அதிகமாக இருப்பதால் தயாரிப்பாளர்கள் அதில் முதலீடு செய்யத் தயங்குவதாலும், வேள்பாரி படத்திற்கு முன்னதாக சங்கர் வேறொரு படத்தை இயக்கவுள்ளார் என்று சினிமா வட்டாரத்தில் தகவல்கள் தெரிவிக்கின்றது. ... திரையரங்குகளில் வெற்றிநடை போடும் லோகேஷ் கனகராஜின் டிசி படம் - போஸ்டர் வெளியிட்டு கொண்டாடும் படக்குழு!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil