Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மலையாளத்தில் எனக்கு பிடித்த நடிகர்களின் படங்கள் வெளியாகிறது -  நடிகர் சூர்யா

மலையாளத்தில் எனக்கு பிடித்த நடிகர்களின் படங்கள் வெளியாகிறது - நடிகர் சூர்யா

TV9 Tamil 1 month ago
மிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒவருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களை தமிழக மக்கள் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளில் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்று வருகின்றது.
அதிலும் குறிப்பாக தமிழ் சினிமா ரசிகர்களைப் போல அதிக அளவில் சூர்யாவை கொண்டாடுவது மலையால சினிமா ரசிகர்களும் உள்ளனர். மலையாள சினிமாவில் ரசிகர்கள் மட்டும் இன்றி பிரபலங்களும் தொடர்ந்து சூர்யா தான் தங்களுக்கு பிடித்த தமிழ் நடிகர் என்று பல பேட்டிகளில் தெரிவித்து வருகின்றனர். அது தொடர்பான வீடியோக்களும் தொடர்ந்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று கேரளாவில் நடைப்பெற்றது. இந்த விழாவில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படக்குழுவினர் மற்றும் நடிகர்கள் அனைவரும் கலந்து கொண்டு பேசினர். அதில் நடிகர் சூர்யா மலையாள சினிமா ரசிகர்கள் குறித்தும் அவருக்கு பிடித்த நடிகர்கள் குறித்து வெளிப்படையாக பேசினர். அது தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

மலையாளத்தில் எனக்கு பிடித்த நடிகர்களின் படங்கள் வெளியாகிறது:

ஓணம் பண்டிகையை முன்னிட்டு எனக்குப் பிடித்தமான நடிகர்களான பிரித்விராஜ், துல்கர் சல்மான் மற்றும் நிவின் பாலி ஆகியோரின் படங்கள் வெளியாகின்றன. அவர்களுக்கும் எனது வாழ்த்துகள். மலையாளத் திரைப்படங்களைப் பொறுத்தவரை, அது சூப்பர் ஹீரோ படமாகவோ, குற்றப் பின்னணி கொண்டதாகவோ, துப்பறியும் திரில்லராகவோ அல்லது வேறு எந்த வகையைச் சார்ந்ததாகவோ இருந்தாலும், மனித உணர்வுகளே அதன் மையமாக இருக்கும். உணர்வுகளுக்கு மொழி அல்லது எல்லைகள் என்ற பாகுபாடு தேவையில்லை. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்திலும் அத்தகைய அழகான தருணங்கள் உள்ளன. வாரணம் ஆயிரம் மற்றும் கஜினி ஆகிய படங்களில் இடம்பெற்ற அந்த அன்பிற்குரிய கதாபாத்திரங்களும் அழகான தருணங்களும் உங்களுக்கு நினைவிருந்தால், இந்தப் படத்திலும் அவை நிறையவே உள்ளன. நீங்கள் எதிர்பார்ப்பவை மட்டுமல்ல, எதிர்பாராத பல விஷயங்களும் இதில் அடங்கியுள்ளன என்று சூர்யா தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. ... அந்த உறவு காமெடியாகவும் - சர்ச்சையாகவும் பார்க்கப்படுகின்றது… இயக்குநர் வெங்கி அட்லூரி

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil