தெலுங்கு மொழியில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் தனது இயக்குநர் பணியைத் தொடங்கினார் இயக்குநர் வெங்கி அட்லூரி. இவரது இயக்கத்தில் தெலுங்கு சினிமாவில் அடுத்தடுத்து வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
அந்த உறவு காமெடியாகவும் - சர்ச்சையாகவும் பார்க்கப்படுகின்றது:
அந்தப் பேட்டியில் இயக்குநர் வெங்கி அட்லூரி பேசியதாவது, வயது வித்தியாசமுள்ள உறவுகள் பெரும்பாலும் நகைச்சுவைக்காகவோ அல்லது சர்ச்சைகளுக்காகவோ சித்தரிக்கப்படுகின்றன. 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' மூலம், நான் கண்ணியத்துடனும் உணர்வுப்பூர்வமான நேர்மையுடனும் ஒரு கதையைச் சொல்ல விரும்பினேன். மாமிதா பைஜுவின் உணர்வுகள் போற்றுதலில் இருந்து வெளிப்படுகின்றன, அதே சமயம் சூர்யா முதிர்ச்சி, பொறுப்பு மற்றும் மரியாதையுடன் பதிலளிக்கிறார் என்று அந்தப் பேட்டியில் வெங்கி அட்லூரி தெரிவித்து இருந்தார். இது தற்போது இணையத்தில் அதிக அளவில் பேசப்பட்டு வருகின்றது. ... ஜீவாவாக மாளவிகா மோகனன்.. ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் பாக்கெட் நாவல் பட BTS வீடியோ!இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

