தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். கைக் குழந்தையாக இருக்கும் போதே சினிமாவில் என்ட்ரி கொடுத்த இவர் குழந்தை நட்டத்திரமாக இருக்கும் போதே தனக்கு என்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.
அரசன் படத்தின் தற்போதைய நிலை என்ன?
அந்த வகையில் நடிகர் சிலம்பரசன் தற்போது நடித்து வரும் படம் அரசன். இயக்குநர் வெற்றிமாறன் இந்தப் படத்தினை எழுதி இயக்கி வருகிறார். படத்தின் டைட்டில் டீசர் வெளியான போது அதனைப் பார்த்த ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வந்த நிலையில் இடையில் சில பிரச்சனைகளால் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பிரச்சனைகள் எல்லாம் சரி செய்த பிறகு தற்போது மீண்டும் படப்பிடிப்பு வேகமாக தொடங்கியுள்ளனர் அரசன் படக்குழுவினர். இது தொடர்பான புகைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. ... கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே உண்டான காதல் அதிசயம் - 28 ஆண்டுகளைக் கடந்தது ஜீன்ஸ் படம்!அரசன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

