தமிழ் சினிமாவில் மக்கள் தற்போது மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்து இருக்கும் படம் கருப்பு. நடிகர் சூர்யா நாயகனாக நடித்து உள்ள இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா நாயகியாக நடித்து உள்ளார்.
மதுரையில் நடைபெறும் கருப்பு படத்தின் இசை வெளியீட்டு விழா:
இந்த நிலையில் கருப்பு படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து முன்னதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வந்தது. அதன்படி மதுரையில் வருகின்ற 26-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி மதுரை மக்களே ரெடியா என்று ஒரு எக்ஸ் தள பதிவை வெளியிட்டுள்ளார். இதன் காரணமாக அந்த தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையில் இதுவரை 3 பாடல்கள் கருப்பு படத்தில் இருந்து வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. ... ஓட்டு போட சென்ற நடிகைக்கு காத்திருந்த அதிர்ச்சி… வாக்குச்சாவடியில் நடந்தது என்னஆர்.ஜே.பாலாஜி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

