வாரிசு நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன நடிகர் அதர்வா முரளி தொடர்ந்து நடிப்பில் தனது கடின உழைப்பின் கரணமாக தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களிடியே தனக்கு என்று ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியாக நடிகராக வலம் வரும் நடிகர் அதர்வா முரளி நடிப்பில் இறுதியாக பராசக்தி என்ற படம் வெளியாகி இருந்தது. தமிழ் சினிமாவில் இந்த 2026-ம் ஆண்டின் முதல் படமாக வெளியாகி இருந்தது. இந்தப் படத்தில் நாயகன் சிவகார்த்திகேயனின் தம்பியாக நடிகர் அதர்வா முரளி நடித்து இருந்தார். ஆனாலும் இந்தப் படத்தின் கதை அதர்வா முரளியை சுற்றியே நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் நடிகர் அதர்வா முரளி நடிப்பில் வெளியாக உள்ள படம் இதயம் முரளி. இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் எழுதி இயக்கி உள்ள இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் மற்றும் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இதயம் முரளி படத்திலிருந்து வெளியானது கட்டழகி வீடியோ பாடல்:
அந்த வகையில் இதயம் முரளி படம் வருகின்ற 10-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ள நிலையில் தொடர்ந்து பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் தற்போது இதயம் முரளி படத்தில் இருந்து கட்டழகி என்ற பாடலைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்தப் பாடல் வீடியோ ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றது. ... சூர்யா ரசிகர்களே நீங்கள் நிச்சயமாக பெருமைப்படுவீர்கள் - வைரலாகும் ஜிவி பிரகாஷ் குமார் எக்ஸ் போஸ்ட்இதயம் முரளி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு: