Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தற்போதைய தமிழ் சினிமாவில் மிகவும் புத்திசாலியான நபர் பிரதீப் ரங்கநாதன் - ஆர்.ஜே.பாலாஜி

தற்போதைய தமிழ் சினிமாவில் மிகவும் புத்திசாலியான நபர் பிரதீப் ரங்கநாதன் - ஆர்.ஜே.பாலாஜி

TV9 Tamil 3 weeks ago
மிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த நடிகர் ஆர்.ஜே.பாலாஜி. ரேடியோவில் ஆர்.ஜே-வாக தனது முதல் பணியைத் தொடங்கினார்.
தொடர்ந்து சினிமாவில் நடிகராக எண்ட்ரி கொடுத்த பிறகு அடுத்தடுத்தப் படங்களில் காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த ஆர்.ஜே,பாலாஜி பிறகு படங்களில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து மற்ற இயக்குநர்களின் இயக்கத்தில் வெளியான படங்களில் நாயகனாக நடித்து வந்த இவர் பிறகு தனது படங்களை தானே எழுதி இயக்கத் தொடங்கினார். தொடர்ந்து இவர் எழுதி இயக்கியப் படங்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி இடத்திற்கு முன்னேறினார் ஆர்.ஜே.பாலாஜி. இந்த நிலையில் சமீபத்தில் இவர் எழுதி இயக்கி பிறகு வில்லனாக நடித்த ஆர்.ஜே.பாலாஜி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றார். மேலும் இதுவரை இல்லாத அளவிற்கு கமர்சியல் படமாக வெளியான இந்த கருப்பு படம் வசூலில் மாபெரும் வெற்றியைப் பெற்றது. ஆர்.ஜே.பாலாஜி சினிமா கெரியரில் இதுதான் அதிக வசூல் செய்த படமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தொடர்ந்து பேட்டிகளை அளித்து வரும் ஆர்.ஜே.பாலாஜி சமீபத்தில் அளித்தப் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் மிகவும் புத்திசாலியான நபர் பிரதீப் ரங்கநாதன்:

தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் மிகவும் புத்திசாலியான நபர்பிரதீப் ரங்கநாதன். அபாரமான மூளை. விஷயங்களை எப்படித் திட்டமிடுவது, தொகுப்பது, மற்றும் அற்புதமாக வழங்குவது என்று அவருக்குத் தெரியும். கருப்பு படத்தைப் பார்த்த பிறகு அவர் எனக்கு ஒரு வாய்ஸ் நோட் அனுப்பினார். அவர் சில அம்சங்களைப் பாராட்டிய விதம், அவர் எவ்வளவு புத்திசாலி என்பதைக் காட்டியது. நான் டூட் படத்தை முதல் நாள் முதல் காட்சியிலேயே பார்த்தேன், அவர் தனது ஆற்றலால் திரையை பரபரப்பாக வைத்திருந்தார். எல்.கே.ஜி படத்திற்கான வசனங்களின் ஒரு வரைவை அவரே எழுதினார், அதில் சிலவற்றை நாங்கள் படத்தில் பயன்படுத்தினோம். ஒரு நட்சத்திரத்திற்குரிய அனைத்து குணங்களும் அவரிடம் உள்ளன. ஒவ்வொரு தலைமுறையிலும் அவரைப் போன்ற ஒரு நட்சத்திரம் எப்போதும் இருப்பார். தொடர்ச்சியாக 100 கோடி வசூல் செய்யும் படங்கள் எளிதான சாதனை அல்ல. ... ஒரு புதிய பயணம் தொடங்குகிறது… சூர்யா 48 படம் குறித்து இயக்குநர் வெளியிட்ட பதிவு

இணையத்தில் வைரலாகும் ஆர்.ஜே.பாலாஜி பேச்சு:

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil