Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அட்டகாசமான அம்சங்கள் உடன் அசத்தல் ரீச்சார்ஜ் திட்டங்களை வழங்கும் பிஎஸ்என்எல்!

அட்டகாசமான அம்சங்கள் உடன் அசத்தல் ரீச்சார்ஜ் திட்டங்களை வழங்கும் பிஎஸ்என்எல்!

TV9 Tamil 1 month ago
ற்போதைய காலக்கட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது கைகளிலும் இருக்கும் மிக முக்கிய சாதனமாக ஸ்மார்ட்போன் (Smartphone) உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன்கள் இயங்க சார்ஜ் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு ஸ்மார்ட்போனில் இருக்கும் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட தளங்களை பயன்படுத்த இணைய வசதி மிக முக்கியம். இந்த இணைய வசதியை வழங்க பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. இந்த நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் சில அசத்தலான திட்டங்கள் குறித்தும் அவற்றின் சிறப்புகள் குறித்தும் விரிவாக பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் சில அசத்தலான ரீச்சார்ஜ் திட்டங்கள்

இந்திய அரசால் நடத்தப்படும் மிகப்பெரிய தகவல் தொலைத்தொடர்பு நிறுவனமாக பிஎஸ்என்எல் உள்ளது. பிற தனியார் நிறுவனங்களை விடவும் பிஎஸ்என்எல் சற்று குறைந்த விலையில் திட்டங்களை வழங்குகிறது. அவற்றில் சிறந்த சில திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

ரூ.347-க்கான ப்ரீபெய்டு திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.347-க்கான இந்த திட்டத்திற்கு 50 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கப்படும். அதாவது இந்த திட்டத்தில் ரீச்சார்ஜ் செய்தால் மொத்தம் 100 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தில் ஒரு சிறப்பு அம்சம் உள்ளது. அதாவது, நீங்கள் தினசரி டேட்டாவை பயன்படுத்தி முடித்துவிட்டாலும், கூடுதலாக 40 கேபிபிஎஸ் வேகத்தில் உங்களுக்கு இணைய வசதி கிடைக்கும். கிரெடிட் கார்டு இஎம்ஐகளின் மறைமுகக் கட்டணங்கள் - அதிர்ச்சி தகவல்

ரூ.485-க்கான ப்ரீபெய்டு திட்டம்

ரூ.485-க்கான இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கப்படும். இந்த திட்டத்தில் வேலிடிட்டி மொத்தம் 72 நாட்கள் ஆகும். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் உங்களுக்கு மொத்தமாக 144 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தின் கூடுதல் சிறப்பு அம்சமாக நீங்கள் தினசரி 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்திய பிறகும் உங்களுக்கு கூடுதலாக 40 கேபிபிஎஸ் வேகத்தில் உங்களுக்கு இணைய வசதி கிடைக்கும். டாடா கார் வாங்கப்போறீங்களா? விலை உயர்வை தவிர்க்க உடனே இதை பண்ணுங்க

ரூ.599-க்கான ப்ரீபெய்டு திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த ரூ.599-க்கான திட்டத்தில் தினசரி 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு மொத்தம் 70 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ரீச்சார்ஜ் செய்யும் பட்சத்தில் மொத்தம் 210 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தில் தினசரி 3 ஜிபி டேட்டா தீர்ந்த உடன் 40 கேபிபிஎஸ் வேகத்தில் உங்களுக்கு இணைய வசதி கிடைக்கும்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil