Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அயோத்தி பட இயக்குநருடன் இணையும் விஜய் ஆண்டனி? - வைரலாகும் தகவல்!

அயோத்தி பட இயக்குநருடன் இணையும் விஜய் ஆண்டனி? - வைரலாகும் தகவல்!

TV9 Tamil 4 months ago
சையமைப்பாளர் மற்றும் நடிகர் என சினிமாவில் இரு பணிகளையும் சிறப்பாக செய்துவருபவர் விஜய் ஆண்டனி (Vijay Antony).
இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் சக்தி திருமகன் (Sakthi Thirumagan). இந்த படமானது கடந்த 2025ம் ஆண்டு இறுதியில் வெளியாகியிருந்த நிலையில், மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. அரசியல், க்ரைம் திரில்லர் கதைக்களத்தில் இப்படமானது வெளியாகியிருந்த நிலையில், விஜய் ஆண்டனிக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. இதையடுத்து இவரின் தயாரிப்பில், பூக்கி (Pookie) என்ற படமும் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அந்த வரிசையில் 2026ம் ஆண்டில் இவரின் நடிப்பில் வெளியாக திறக்கியுள்ள திரைப்படம்தான் நூறு சாமி (Nooru Saami). இதில் விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, லிஜோமோல் ஜோஸ் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். இதை இயக்குநர் சசி இயக்கியிருக்கும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துவருகிறது. அந்த வகையில் இப்படத்தை அடுத்ததாக அயோத்தி படத்தின் (Ayothi) இயக்குநர் மந்திர மூர்த்தியின் (Manthira Moorthy) இயக்கத்தில், விஜய் ஆண்டனி புதிய படத்தில் நடிக்கவுள்ளாராம். இது தொடர்பான தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. கோடி ரூபா கொடுத்தாலும் அந்த விளம்பரங்களை பண்ணமாட்டேன் - ஜி.வி.பிரகாஷ் குமார் பேச்சு!

அயோத்தி பட இயக்குநருடன் புதிய படத்தில் இணையும் விஜய் ஆண்டனி :

இயக்குநர் மந்திரமூர்த்தியின் இயக்கத்தில், கடந்த 2023ம் ஆண்டில் வெளியான படம்தான் அயோத்தி. இதில் சசிகுமார், ப்ரீத்தி அஸ்ரானி போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்திருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தின் முழக்கம்தான் இயக்குநர் மந்திர மூர்த்தி தமிழ் சினிமாவில் இயக்குனராக நுழைந்திருந்தார். கோவை வந்த தனுஷ்.. வேலுடன் வரவேற்ற ரசிகர்கள் - வீடியோ இதோ! இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 3 ஆண்டுகளை கடந்த நிலையிலும், இவர் பெரிதாக எந்த படத்திலும் ஒப்பந்தமாகவில்லை. அந்த வகையில் தற்போது விஜய் ஆண்டனியை வைத்து புதிய படத்தை இவர் இயக்கவுள்ளாராம். இந்த படத்தின் ஷூட்டிங் வரும் 2026ம் ஆண்டு மே மாதத்தில் தொடங்கவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

விஜய் ஆண்டனியின் புதிய திரைப்படம் குறித்து வைரலாகும் பதிவு:

விஜய் ஆண்டனியின் கைவசத்தில் நூறு சாமி, லாயர் போன்ற அடுத்தடுத்த படங்கள் தயாராகிவருகிறது. அந்த வரிசையில் அயோத்தி பட இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கத்திலும் இவர் புதிய படத்தில் இணையவுள்ளார். இந்த படமும் அயோத்தி படத்தை போலவே எமோஷனல் மற்றும் திரில்லர் கதைக்களத்தில் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil