தமிழ் சினிமாவில் கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் கேடி பில்லா கில்லாடி ரங்கா.
இந்தப் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் விமல் இருவரும் கதையின் நாயகன்களாக நடித்து இருந்தனர். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பிந்து மாதவி, ரெஜினா கசாண்ட்ரா, சூரி, டெல்லி கணேஷ், மனோஜ் குமார், சுஜாதா சிவகுமார், நாடோடிகள் கோபால், நமோ நாராயணா, மைனா நந்தினி, வழக்கு என் முத்துராமன், கௌதம் புருசோத், ரயில் ரவி என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனங்களான பசங்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் பாண்டிராஜ் மற்றும் பி. மதன் ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக்கொண்ட பில்லாவும் ரங்காவும்:
இந்தப் படத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் விமல் இருவரும் இரட்டை நாயகன்களாக இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். இவர்கள் இருவரும் பொருப்பே இல்லாமல் சுற்றித் திரியும் போது அவர்களின் தந்தைகளால் ஒரு கட்டத்தில் திருந்தி வாழ்கின்றனர். இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் இருவரும் பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்தித்திக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ... கமல் ஹாசனின் சூப்பர் ஹிட் படம் மூன்றாம் பிறை மறுசீரமைக்கப்பட்டு ஓடிடியில் வெளியாக உள்ளது .இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

