Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பயணி எழுப்பிய கேள்வி.. போக்குவரத்து துறை அமைச்சரின் சர்ச்சை பதில்.. வைரலாகும் பேச்சு!

பயணி எழுப்பிய கேள்வி.. போக்குவரத்து துறை அமைச்சரின் சர்ச்சை பதில்.. வைரலாகும் பேச்சு!

TV9 Tamil 1 week ago
மிழகத்தில் பக்ரீத் பண்டிகை, முகூர்த்த நாள், வார இறுதி விடுமுறை நாள் ஆகியவை அடுத்தடுத்து வந்த காரணத்தால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இருந்து அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த பேருந்துகளில் பயணம் செய்வதற்காக முன்பதிவு செய்த பயணிகள் மற்றும் முன்பதிவு செய்யாத பயணிகள் என ஏராளமானோர் காத்திருந்தனர். அப்போது, போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் மற்றும் போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அவரிடம், அங்கு கூடியிருந்த பயணிகள் போதிய பேருந்துகள் இல்லை என்றும், முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகளில் முன்பதிவு செய்யாத பயணிகளை ஏற்றி அனுப்பி வைத்து வருகின்றனர். இதனால், முன்பதிவு செய்த பயணிகள் கடும் அவதி அடைவதாக குற்றம் சாட்டினர்.

நீ நல்லா சாப்பிட்ட  நான் இன்னும் சாப்பிடல

மேலும், ஆண் பயணி ஒருவர் தான் முன்பதிவு செய்த பேருந்துக்காக சுமார் ஒரு மணி நேரம் காத்திருப்பதாகவும், தற்போது வரை அந்த பேருந்து வரவில்லை என்றும் தெரிவித்தார். இதை கேட்ட போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் " நீ நல்லா சாப்பிட்டிருக்க, நான் இன்னும் சாப்பிட கூட இல்லை" என்று மூன்று நான்கு முறை கூறினார். அப்போது, அவருடன் இருந்த காவலர் ஒருவர் அந்த பயணியை பேசி அனுப்பி வைக்க முயன்றார். அப்போது, மீண்டும் அந்த பயணியிடம் நான் சாப்பிடவில்லை என்று கையெடுத்து கும்பிட்டு புரிந்து கொள் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.  
தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. அதிமுகவில் அடுத்தடுத்து அதிர்ச்சி!!

அமைச்சரின் பேச்சுக்கு வலுக்கும் கண்டனங்கள்

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வுக்காக வந்திருந்த போக்குவரத்து துறை அமைச்சர் பயணி எழுப்பிய கேள்விக்கு இப்படி தான் பதில் கூறுவாரா? இவ்வாறு பதில் அளித்தால் அவர் எதற்காக ஆய்வு மேற்கொண்டார்? போக்குவரத்து துறையின் அமைச்சராக இருந்து கொண்டு இவ்வாறு பொறுப்பு இல்லாமல் பதில் அளித்தால் எப்படி? என்று பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

வைரலாகும் அமைச்சர்களின் பேச்சுகள்

ஏற்கனவே, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கோயில்களில் உள்ள பிரசாத ஸ்டால்களில் தவகவினர் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தனது துறை எதுவென்று தெரியாமல் சுற்றுலாத்துறை என்று கூறி குழப்பத்தில் ஆழ்ந்ததும் சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, போக்குவரத்து துறை அமைச்சரின் பேச்சு வைரலாகி வருகிறது.  
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil