Dailyhunt
பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழைந்த ஆதிரை. அதிர்ச்சியில் எஃப்ஜே மற்றும் வியானா

பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழைந்த ஆதிரை. அதிர்ச்சியில் எஃப்ஜே மற்றும் வியானா

TV9 Tamil 4 months ago
பிக்பாஸ் தமிழ் சீசன் 9நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து படத்தில் பல ட்விஸ்ட் மற்றும் டர்ன்களை ரசிகர்களும் போட்டியாளர்களும் பார்த்து வருகின்றனர்.
எதிர்பாரததை எதிர்பாருங்கள் என்பதைப் போல ஒரே வாரத்தில் டபுள் எவிக்‌ஷன் மற்றும் வைல்டார்ட் போட்டியாளர்கள் என்ட்ரி என அனைத்தும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. முன்னதாக இந்த நிகழ்ச்சி தொடங்கியதி இருந்து தொடர்ந்து சண்டைகள் மட்டுமே இருந்ததால் ரசிகர்களுக்கு நிகழ்ச்சியைப் பார்க்கும் போது அதிருப்த்தி ஏற்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சி இதற்கு முன்னதாக வெளியான சீசன்களை விட அதிக அளவில் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வந்தது. இந்த நெகட்டிவ் விமர்சனங்களை சரி செய்ய பிக்பாஸ் நிகழ்ச்சி குழு தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் 4 வது வார இறுதியில் வைல்காட்ர் போட்டியாளர்கள் நுழைந்த பிறகு ஆட்டத்தில் மாற்றம் ஏற்பட்டது. மேலும் போட்டியாளர்கள் எதிர்பாராத பல விசயங்கள் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் நடைப்பெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் நோ எவிக்‌ஷன் என்ற செய்தி முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் மாஸாக என்ட்ரி கொடுத்த ஆதிரை:

இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட நடிகை ஆதிரை 3-வது வாரமே போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டு குறைவான வாக்குகளை மக்களிடையே பெற்று வெளியேறி இருந்தார். இவர் இந்த வீட்டில் இருந்த போது எஃப்ஜே உடன் நெறுக்கமாக இருந்தது அனைவரும் அறிந்ததே. இவரின் வெளியேற்றம் பார்வையாளர்கள் பலரிடம் வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தது. மேலும் ஆதிரை வெளியே சென்ற பிறகு எஃப்ஜே வியானாவிடம் நெறுக்கமாக பழகி வந்தார். இந்த நிலையில் 56-வது நாளான இன்று பிக்பாஸ் வீட்டிற்கும் வைல்ட்கார்ட் போட்டியாளராக ஆதிரை மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளது எஃப்ஜே மற்றும் வியானாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ... பட்ஜெட் பிரச்சினைகள் காரணமாக D55 படத்தை கைவிட்ட பிரபல தயாரிப்பு நிறுவனம்

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil