தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சியான் விக்ரம் (Chiyaan Vikram).
இணைகிறதா விக்ரம் மற்றும் பிளாஸ்ட் பட இயக்குநரின் கூட்டணி:
கடந்த 2026ம் ஆண்டு ஜூன் தொடக்கத்தில் வெளியான படம் பிளாஸ்ட். இதில் அர்ஜுன், அபிராமி மற்றும் பிரீத்தி முகுந்தன் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது அதிரடி ஆக்ஷன் மற்றும் வித்தியாசமான கதைக்களத்தில் வெளியாகியிருந்த நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தில் அர்ஜுன் நடித்திருந்த வேடத்தில், ஆரம்பத்தில் விக்ரம்தான் நடிக்கவேண்டியதாம். ஆனால் அவர் இதில் நடிக்கவில்லை. அதன்பிறகே அர்ஜுன் இப்படத்தில் நடித்திருக்கிறார். அனைவரும் எதிர்பார்த்த ஹார்ட் பீட் சீசன் 3 ரிலீஸ் எப்போது? - வெளியான அறிவிப்பு இதோ! மேலும் பிளாஸ்ட் பட இயக்குநர் சுபாஷ் கே ராஜ் தற்போது விக்ரமிற்காக கதை ஒன்றை எழுதியுள்ளாராம். அதை அவரிடம் கூறியுள்ளாராம். பிளாஸ்ட் பட வெற்றியை அடுத்து மீண்டும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் கீழ் புது படம் ஒன்றை இயக்கவுள்ளார். அதற்காக கார்த்தியிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருகிறதாம். விரைவில் இதுகுறித்த அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இயக்குநர் சுபாஷ் கே ராஜ் புது திரைப்படம் குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு:
இவர் கார்த்தி மற்றும் விக்ரம் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தும் நிலையில், இதில் யாருடனாவது நிச்சயம் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டுவருகிறது.

