Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பிளாஸ்ட் படத்தின் மொத்த வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? அப்டேட் இதோ

பிளாஸ்ட் படத்தின் மொத்த வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? அப்டேட் இதோ

TV9 Tamil 2 weeks ago
மிழ் சினிமாவில் இந்த 2026-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே பல சிறந்த படங்கள் தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குநர்களின் படமாக வெளியாகும் பெரும்பான்மையான படங்கள் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் இந்த 2026-ம் ஆண்டும் தொடர்ந்து அறிமுக இயக்குநர்களின் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநர் சுபாஷ் கே ராஜ் எழுதி இயக்கி உள்ள படம் பிளாஸ்ட். கடந்த மே மாதம் 28-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் இந்தப் படம் வெளியானது. இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருந்த நிலையில் முன்னதாக அந்த நிறுவத்தின் திரையரங்குகளில் அதிக அளவில் வெளியாகி இருந்தது. படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் பிறகு மற்ற திரையரங்குகளில் படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. ஆக்‌ஷன் ட்ராமா பாணியில் உருவான இந்தப் படம் திரையரங்குகளில் மட்டும் இன்றி ஓடிடியில் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் வசூலில் ரூபாய் 75 கோடிகளை கடந்தது பிளாஸ்ட் படம்:

நடிகர்கள் அர்ஜுன், பிரீத்தி முகுந்த்  மற்றும் அபிராமி ஆகியோர் நடித்து உள்ள இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி படம் இதுவரை உலக அளவில் ரூபாய் 75 கோடிகளை வசூல் செய்துள்ளது. இதனை படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ... அர்ஜுன் தாஸின் கான் சிட்டி படத்தை பார்த்து பாராட்டிய லோகேஷ் கனகராஜ்!

பிளாஸ்ட் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil