இந்தப் படத்தை இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்
எழுதி இயக்கி இருந்தார். இவர் இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் அவர் இயக்கிய லவ் டுடே என்ற படத்தில் அவரே நாயகனாகவும் நடித்து இருந்தார். இந்தப் படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் நாயகனாகவும் அறிமுகம் ஆனார். இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படம் எப்படி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றதோ அதே போல இவர் நாயகனாக நடித்த முதல் படமும் தற்போது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி 2025-ம் ஆண்டு வெளியானது டிராகன். இந்தப் படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து இருந்தார். இதில் இவருக்கு மூன்று நாயகிகள் ஜோடியாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து படங்களை இயக்குவதில் இருந்து விலகி தற்போது நாயகனாக நடித்து வருகிறார். டியூட் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு:
அதன்படி தற்போது பிரதீப் ரங்கநாதன் இயக்குநர் கீத்தீஸ்வரன் இயக்கத்தில் டியூட் படத்தில் நடித்துள்ளார். அதே போல இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்திலும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். இந்த நிலையில் இன்று டியூட் படக்குழு அந்த வெளியீட்டை உறுதி செய்யும் வகையில் வருகின்ற 17-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டுதான் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்று போஸ்டர் வெளியிட்டு உறுதி செய்துள்ளனர். ... ஓடிடியில் வெளியானது நடிகர் சிவகார்த்திகேயனின் மதராஸி படம்!டியூட் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு: