தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் படங்களில் நடித்து வந்தாலும் இவரது படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
பூஜையுடன் தொடங்கியது துருவ் விக்ரமின் புதுப் படம்:
அதன்படி அறிமுக இயக்குநர் கரன் அரவிந்த் குமார் எழுதி இயக்கும் படம் துருவ் விக்ரம் 4. நடிகர் துருவ் விக்ரமின் 4-வது படமாக உருவாக உள்ள இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்தப் படத்தில் நடிகர் துருவ் விக்ரம் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வந்த நிலையில் இதுவரை படக்குழு அதனை உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று துருவ் விக்ரமின் 4-வது படத்தின் பூஜை நடைப்பெற்றுள்ள நிலையில் அது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ... தமிழ் டப்பிங்ல இருக்க இந்த அமெரிக்கன் படத்தை மிஸ் செய்யாதீர்கள்… வாய்ஸ் மெயில் ஃபார் இசபெல்லா படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?மைத்திரி மூவி மேக்கர்ஸ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

