தமிழகத்தில் ஏப்ரல் 3- ஆம் தேதி ( வெள்ளிக்கிழமை) புனித வெள்ளி கடைபிடிக்கப்படுகிறது. அந்த நாள் அரசு விடுமுறை தினமாகும்.
கிளாம்பாக்கம்- கோயம்பேட்டில் இருந்து சிறப்பு பேருந்துகள்
இதே போல, ஏப்ரல் 3- ஆம் தேதி மற்றும் 4- ஆம் தேதி கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இருந்து 395 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நாகப்பட்டினம், திருவண்ணாமலை, பெங்களூர், வேளாங்கண்ணி, ஓசூர் ஆகிய ஊர்களுக்கு நாளை வியாழக்கிழமை 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதே போல, நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 90 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. வேட்பாளரின் அக்கப்போருக்கு ஒரு அளவே இல்லையா.. வேட்புமனு தாக்கல் செய்ய பாடை கட்டி வந்த நபர்.. பின்னால் வந்த சிக்கல்!சொந்த ஊர்களில் இருந்து திரும்புவதற்கு 735 பேருந்துகள்
இதே போல, மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து நாளை வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை ஏப்ரல் 4- ஆம் தேதி வரை 24 சிறப்பு பேருந்துகளும் திருப்பூர், கோயம்புத்தூர், பெங்களூர், ஈரோடு ஆகிய ஊர்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதை தவிர, ஏப்ரல் 5-ம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) சொந்த ஊர் சென்ற பொதுமக்கள் சென்னை, பெங்களூர் உள்ளி வெளியூர்களுக்கு திரும்புவதற்கு வசதியாக ஞாயிற்றுக்கிழமை 735 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.பயணிகளின் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கம்
இந்த பேருந்துகள் அனைத்தும் பயணிகளின் தேவைகளுக்கு ஏற்ப அனைத்து பகுதிகளில் இருந்தும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, வார விடுமுறை, அரசு விடுமுறை நாட்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்களில் வெளியூர்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு ஏராளமான பொதுமக்கள் பயணம் மேற்கொள்வார்கள். அவர்களின் வசதிக்காக அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அடுத்த 6 நாட்களுக்கு மழை கொட்டப்போகுது.. எங்கெல்லாம் தெரியுமா?.. வானிலை அப்டேட் இதோ!!
