இயக்குநர் சுதா கொங்கராவின் (Sudha Kongara) உதவி இயக்குநராக பணியாற்ற, கடந்த 2025ம் ஆண்டில் வெளியான டியூட் (Dude) என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கீர்த்திஸ்வரன்(Keerthiswaran).
டியூட் 2 திரைப்படம் உருவாகுமா என்பது குறித்து இயக்குநர் கீர்த்திஸ்வரன் விளக்கம்:
சமீபத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டியூட் பட இயக்குநர் கீர்த்திஸ்வரன் அதில், "நான் சமீபத்தில் பிரதீப் ரங்கநாதனிடம் ஒரு ஐடியாவை முன்வைத்தேன். அவருக்கு அது ரொம்பவே பிடித்திருந்தது. அதில் டியூட் படத்தின் தொடர்ச்சியும் இருக்கிறது. டியூட் படம் நல்ல வெற்றியை பெற்றிருந்ததால், அவருக்கு நான் கூறிய கதையை டியூட் 2 படமாக தொடரலாம் என தெரிவித்தேன்" என அதில் அவர் கூறியுள்ளார். ஜஸ்ட் காட் திங்க்ஸ்… இன்று இரவு முதல் ஓடிடியில் காணக் கிடைக்கும் கருப்பு படம்!டியூட் 2 படம் குறித்து இயக்குநர் கீர்த்திஸ்வரன் பேசியது தொடர்பாக வைரலாகும் பதிவு:
இயக்குநர் கீர்த்திஸ்வரன் தற்போது புதிய படத்திற்கான கதை எழுதும் பணிகளில் இருக்கிறாராம். இவர் சிலம்பரசனின் புதிய படத்தை இயக்கவுள்ளதாக கூறப்பட்டுவரும் நிலையில், அதற்கான கதையை எழுதிவருவதாகவும் சமீபத்தில் உறுதிப்படுத்தியிருந்தார். இப்படம் ஆக்ஷன், காமெடி மற்றும் எமோஷனல் போன்ற கதைக்களத்தில் தயாராகவுள்ளதாக அவர் கூறியுள்ளார். இப்படம் அரசன் திரைப்படத்திற்கு பிறகு உருவாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படமானது டியூட் படத்தை போலவே சிலம்பரசனுக்கும் வெற்றியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

