சினிமாவில் தனது சிறுவயது முதல் தற்போதுவரையிலும் மக்கள் மத்தியில் நெருக்கமான ஒருவராக இருந்துவருபவர் சிலம்பரசன்(Silambarasan).
சிலம்பரசன் - கீர்த்திஸ்வரனின் கூட்டணி படத்தின் தயாரிப்பு நிறுவனம் :
சிலம்பரசன் மற்றும் கீர்த்திஸ்வரனின் கூட்டணி படத்தை, டியூட் படத்தை தயாரித்திருந்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக ஆரம்பத்தில் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகிவந்தது. ஆனால் சித்தாரா என்டேர்டைமென்ஸ் மற்றும் ஏஜிஎஸ் என்டேர்டைமென்ஸ் என தற்போது இந்த நிறுவனங்களும் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகிறது. குஷ்புவின் மகளுக்கு திருமணம் - குடும்பத்துடன் பிரதமருக்கு அழைப்பு - மாப்பிள்ளை இவரா? சிலம்பரசன், அரசன் படத்தை முடித்த கையேடு அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் STR51 படத்தில் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், அஸ்வத் தற்போது சூப்பர் ஸ்டாரின் 173வது படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக சிலம்பரசன் டியூட் பட இயக்குநர் கீர்த்திஸ்வரனின் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறாராம். இதை எந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் என்பது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.சிலம்பரசன் மற்றும் கீர்த்திஸ்வரன் கூட்டணி படம் குறித்த எக்ஸ் பதிவு:
இன்னும் இந்த கூட்டணி படமானது நடக்குமா என உறுதியாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் சிலம்பரசன் அடுத்ததாக இயக்குநர் அஸ்வத் இயக்கத்தில் புது படத்தில் நடிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

