Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஈரானுக்கு செல்ல வேண்டாம்.. உடனடியாக வெளியேற இந்திய தூதரகம் அறிவுறுத்தல்..

ஈரானுக்கு செல்ல வேண்டாம்.. உடனடியாக வெளியேற இந்திய தூதரகம் அறிவுறுத்தல்..

TV9 Tamil 4 days ago
ஜூலை 20, 2026: ஈரானில் நிலவி வரும் பாதுகாப்பு சூழல் மோசமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள இந்தியர்கள் தங்களது பயணத்தைத் தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
அதேபோல், ஏற்கனவே ஈரானில் உள்ள இந்தியர்கள், கிடைக்கக்கூடிய விமான சேவைகளைப் பயன்படுத்தி தற்காலிகமாக அந்நாட்டை விட்டு வெளியேறுவது குறித்து பரிசீலிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்ட திருத்தப்பட்ட அறிவுறுத்தலில், ஈரானில் கடந்த சில நாட்களாக நிலையற்ற தன்மை மற்றும் மோதல் அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

ஈரானுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் - இந்திய தூதரகம்:

இதனால், எந்தவொரு காரணத்திற்காகவும் ஈரானுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ள இந்தியர்கள், பாதுகாப்புச் சூழல் மேம்படும் வரை தங்களது பயணத்தைத் தற்காலிகமாக ஒத்திவைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஈரானில் உள்ள இந்தியர்கள், கிடைக்கக்கூடிய விமான சேவைகளைப் பயன்படுத்தி தற்காலிகமாக ஈரானை விட்டு வெளியேறுவது குறித்து பரிசீலிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஈரானிலேயே தங்கியிருக்க முடிவு செய்யும் இந்தியர்கள், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், அங்குள்ள நிலவரங்களை முழுமையாக அறிந்து கொள்ள செய்திகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக, நாட்டின் தெற்கு கடலோரப் பகுதிகள் உள்ளிட்ட அதிக அளவிலான ராணுவ நடவடிக்கைகள் நடைபெறும் இடங்களைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.   கோபத்தில் கொதித்த ட்ரம்ப்.. ஏவுகணைகள் மழை பொழிந்த அமெரிக்கா.. ஈரானில் பெரும் அழிவு! உள்ளூர் அதிகாரிகள் பிறப்பிக்கும் உத்தரவுகளை கவனமாகப் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈரானில் உள்ள இந்தியர்கள் இதுவரை இந்தியத் தூதரகத்தில் தங்களது விவரங்களைப் பதிவு செய்யவில்லை என்றால், உடனடியாகப் பதிவு செய்ய வேண்டும் என்றும், மேலதிக தகவல்களுக்காக தூதரகத்தின் இணையதளம் மற்றும் சமூக வலைதளப் பக்கங்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அவசர கால உதவிக்காக தொடர்பு எண்கள்:

அவசர கால உதவிக்காக இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள தொலைபேசி எண்கள்:
  • +989128109115
  • +989128109102
  • +989128109109
  • +989932179359
மின்னஞ்சல்: cons.tehran@mea.gov.in

அமெரிக்கா - ஈரான் மோதல் தீவிரம்:

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், மேற்கு ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் புதிய ராணுவ நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் ராணுவ கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்குப் பதிலடியாக, அமெரிக்காவின் கூட்டணி நாடுகளை இலக்காகக் கொண்டு ஈரான் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.  குறுங்கோள் தாக்கியதால் நொடி பொழுதில் உருவான கோடிக்கணக்கான வைரங்கள்.. அதிசய சம்பவம்!

புதிய தாக்குதல்களை நடத்த அமெரிக்கா திட்டம்:

இதனிடையே, ஈரான் மீது மீண்டும் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவின் பேரில் ஈரான் மீது மேலும் ஒரு சுற்று தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது. ஹார்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் ஏற்படுத்தக்கூடிய அச்சுறுத்தலை மேலும் குறைக்கும் நோக்கத்துடன் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil