கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் மதராஸி.
என் ரசிகர்கள் என்னை வழிபாடு செய்வதை நான் விரும்பவில்லை:
இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் விழாவில் ஒன்றில் பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அதன்படி அவர் கூறியதாவது, என் ரசிகர்கள் என்னை வணங்குவதை நான் விரும்பவில்லை. அவர்கள் கடவுளையும் அவர்களின் பெற்றோரையும் மட்டுமே வணங்க வேண்டும். எனக்கு மிகவும் நட்பு மற்றும் சகோதரத்துவ ரசிகர்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதனால்தான் நான் அவர்களை சகோதர சகோதரிகள் என்று அழைக்கிறேன் என்று சிவகார்த்திகேயன் பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. ... சத்யராஜ் உடன் இருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா? ஒரு மாஸ் நடிகர் தான்இணையத்தில் வைரலாகும் சிவகார்த்திகேயனின் பேச்சு:

