மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஆசிஃப் அலி. இவரது நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து மலையாள சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளிலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
அதன்படி கடந்த ஜூன் மாதம் 6-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் அபயந்தர குட்டவாளி. இந்தப் படத்தை இயக்குநர் சேதுநாத் பத்மகுமா எழுதி இயக்கி இருந்தார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக அரசு கொண்டுவந்த சட்டத்தை சில பெண்கள் தற்போது எப்படி தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதைக் குறித்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் ஆசிஃப் அலி நாயகனாக நடித்துள்ள நிலையில் இவருடன் இணைந்து நடிகர்கள் துளசி, ஸ்ரேயா ருக்மணி, ஜெகதீஷ், விஜயகுமார், ஹரிஸ்ரீ அசோகன், அஸீஸ் நெடுமங்காடு, ஆனந்த் மன்மதன், பிரேம் குமார், சித்தார்த் பரதன், கண்ணன் சாகர், கோபு கேசவ், உஷா சந்திரபாபு, பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, நீரஜா ராஜேந்திரன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
அபயந்தர குட்டவாளி படத்தின் கதை என்ன?
படம் தொடங்கிய போதே நடிகர் ஆசிஃப் அலி மற்றும் துளசி இருவருக்கும் திருமணம் நடைபெறுகின்றது. அடுத்த காட்சியில் ஆசிஃப் அலி போலீஸ் ஸ்டேசனில் இருப்பது போல காட்டப்படுகின்றது. என்ன நடந்தது என்பது குறித்து ஃப்ளாஸ்பேக் காட்சிகள் காட்டப்படுகின்றது. அதில் ஆசிஃப் அலி மற்றும் துளசி இருவருடைய திருமணத்தில் இருந்தே நடந்த பிரச்னைகள் அனைத்தும் காட்டப்படுகின்றது.... நடிகர் ரியோவின் நடிப்பில் 6-வது படத்தின் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு திருமணம் நடைப்பெற்றதில் இருந்து உடல் உறவு நடைபெறாத நிலையில் 10 நாட்களிலேயே பிரச்சனையை செய்துவிட்டு துளசி அவரது அப்பா உடன் சென்றுவிடுகிறார். தொடர்ந்து 1 மாதத்தில் தன்னை கணவர் அடித்து துன்புறுத்தியதாக பொய்யான வழக்கை தொடர்கிறார்கள். இந்த பொய்யான வழக்கை எப்படி ஆசிஃப் அலி சரி செய்து அனைத்துப் பிரச்சனைகளில் இருந்தும் வெளியேறினார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது ஜி5 ஓடிடியில் காணக் கிடைக்கின்றது. ... ரசிகர்களின் கோரிக்கைக்கு இணங்க… நடிகர் சிம்புவின் நியூ லுக்

