Dailyhunt
எனது அன்பின் துருவ்க்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் - மாரி செல்வராஜ்

எனது அன்பின் துருவ்க்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் - மாரி செல்வராஜ்

TV9 Tamil 7 months ago
ரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
இவர் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படத்திலேயே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன், மாமன்னன் மற்றும் வாழை ஆகிய படங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி இவரது இயக்கத்தில் இதுவரை வெளியான நான்கு படங்களும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது நடிகர் துருவ் விக்ரமை வைத்து பைசன் காலமாடன் என்ற படத்தை இயக்கி வருகிறார். படம் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் துருவ் விக்ரம் கபடி வீரராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை அனுபமா பரமேசுவரன் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் லால், பசுபதி, ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம் பெருமாள், அருவி மதானந்த் மற்றும் கலையரசன் என பலரும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள நிலையில் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான அப்லாஸ் எண்டர்டெய்ன்மெண்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் சார்பக தயாரிப்பாளர்கள் சமீர் நாயர், தீபக் சீகல், பா. ரஞ்சித், அதிதி ஆனந்த் ஆகியோர் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

துருவ் விக்ரமிற்கு பிறந்த வாழ்த்து போஸ்டை பதிவிட்ட மாரி செல்வராஜ்:

அதன்படி இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது, எனது அன்பின் துருவ்க்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். பிரமிக்க வைக்கும் உன் உழைப்பின் மூலம் உன் கனவுகள் அத்தனையும் சாத்தியமாகட்டும். நிச்சயம் வெல்வாய் நீ வாழ்த்துக்கள் என்றும் அந்தப் பதிவில் மாரி செல்வராஜ் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. ... ஆர்.ஜே.பாலாஜி கருப்பு படத்தை செதுக்கி இருக்கார் - நடிகர் நட்டி சுப்ரமணியம்!

இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil