2026 ஃபிஃபா உலகக் கோப்பையை(FIFA World Cup 2026) மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்தவுள்ளன.
வருகின்ற 2026 ஜூன் 11ம் தேதி தொடங்கும் ஃபிஃபா உலகக் கோப்பையின் முதல் போட்டி மெக்சிகோ சிட்டியில் தொடங்குகிறது. அதே மெக்சிகோ சிட்டியில்தான் ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியின் தொடக்க விழாவும் நடைபெறுகிறது. அதேநேரத்தில், அமெரிக்கா மற்றும் கனடாவிலும் தொடக்க விழாக்கள் நடைபெறும். இருப்பினும், மெக்சிகோவில் நடைபெறும் விழா குறித்து ஃபிஃபா இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடவில்லை. வரவிருக்கும் ஃபிஃபா உலகக் கோப்பையின் அதிகாரப்பூர்வ பாடலான 'டாய் டாய்' பாடலுடன், உலகப் புகழ்பெற்ற பாடகர்களும் நடனக் கலைஞர்களுமான ஷகீரா மற்றும் பர்னா பாய் தொடக்க விழாவைத் தொடங்கி வைப்பார்கள் என்று ஃபிஃபா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தப் பாடல், உலகளாவிய குடிமக்கள் கல்வி நிதிக்கு சப்போர்ட் செய்யும் விதமாக இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டி தொடங்குவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்பு தொடக்க விழா தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் ஃபிஃபா உலகக் கோப்பை.. வீரர்களின் ஒழுக்கமே முக்கியம்.. புதிய விதிகள் அதிரடியாக அறிமுகம்!
தொடக்க போட்டி எப்போது..?
மெக்சிகோ நகர மைதானத்தில் நடைபெறும் தொடக்க விழா, போட்டி தொடங்குவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்பு ஆரம்பமாகும். முன்னதாக அறிவிக்கப்பட்டபடி, இந்த நிகழ்ச்சியில் அலெஜான்ட்ரோ ஃபெர்னாண்டஸ், பெலிண்டா, பர்னா பாய், டேனி ஓஷன், ஜே பால்வின், லிலா டவுன்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் அஸுல்ஸ், மனா, ஷகிரா மற்றும் டைலா உள்ளிட்ட உலக இசை கலைஞர்கள் பங்கேற்று ரசிகர்களை உற்சாகப்படுத்த இருக்கின்றனர்.தொடக்க விழாத் தொடர்:
மெக்சிகோ ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியின் தொடக்க விழாவை நடத்தவுள்ளது. இதன் தொடக்கமாக, கனடா மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள 3 தொடக்க விழாக்கள் கொண்ட தொடராக அமையும். மேலும், கூடுதல் திறமையாளர்கள் வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறதுஷகீராவுக்கும் ஃபிஃபா உலகக் கோப்பையும்..
ஷகீராவும் பர்னா பாயும் தற்போது அதிகாரப்பூர்வ ஃபிஃபா உலகக் கோப்பை பாடலில் பணியாற்றி வருகின்றனர். இந்தப் பாடலின் ஆடியோ ஏற்கனவே கடந்த 2026 மே 16ம் தேஹி வெளியிடப்பட்டது. ஷகீரா இதற்கு முன்பு தனது பிரபலமான ஃபிஃபா உலகக் கோப்பை பாடலான "வகா வகா" மூலம் ரசிகர்களைக் கவர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஃபிஃபா உலகக் கோப்பை எப்போது தொடக்கம்..? இந்தியாவில் எங்கு காணலாம்..?
முதல் முறையாக 48 அணிகள் பங்கேற்பு:
2026 ஃபிஃபா உலகக் கோப்பை வரலாற்றுச் சிறப்புமிக்கதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் முறையாக, 2026 ஃபிஃபா உலகக் கோப்பையில் 48 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கு முந்தைய 2022 உலகக் கோப்பையில் 32 அணிகள் இடம்பெற்றிருந்தன. இப்போட்டி வருகின்ற 2026 ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடைபெறவுள்ளது.

